‘மாகநடி’ படத்தின் மூலம் தென்னிந்தியா அறிந்த கதாநாயகியாக உயர்ந்தார் கீர்த்தி சுரேஷ். அவரும் கோலிவுட்டின் பிசியான இசையமைப்பாளரான அனிருத்தும் காதலித்து வருவதாக செய்திகள் பரவின.
இதற்கு எல்லாம் காரணம் கீர்த்தி சுரேஷ் போட்ட ஒரே ஒரு ட்வீட் தான். அனிருத்தின் பிறந்தநாளுக்கு அவரை வாழ்த்தி ட்வீட் போட்டார் கீர்த்தி. அத்துடன் தான் அனிருத்துடன் இணைந்து எடுத்த இரண்டு புகைப்படங்களையும் பதிவிட்டார். இதனால் தென்னிந்தியத் திரையுலகம் முழுவதும் தீபோல் இவர்களது நெருக்கம் பேசப்பட்டு வருகிறது.
கீர்த்தி சுரேஷ் தற்போது மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். படப்பிடிப்பு துபாயில் நடந்து வருகிறது. முதல் முறையாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் கீர்த்தி. விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு இசையமைத்த அனிருத் அடுத்ததாக தளபதி 65 படத்திற்கும் இசையமைக்கிறார். தளபதி 65 படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.
அவருக்கு இந்த வாய்ப்பு கிடைக்க அனிருத் தான் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ஆர்சி15 படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தமாகி தமிழ், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருகிறார் அனிருத். அனிருத் - கீர்த்தி சுரேஷ் இருவரும் ஐயர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு இருக்காது என்ற பேச்சும் கிளம்பிவிட்டது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்