கன்னடத்தில் தயாரானாலும் தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியாகி இந்தியாவில் மட்டும் 350 கோடி ரூபாய் வசூலை வாரிக் குவித்தது ‘கே.ஜி.எஃப்’ திரைப்படம்.
அதன் இரண்டாம் பாகத்தை இந்தியா முழுவதும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் நிலையில், ‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் ரிலீஸ் தேதி வரும் ஜூலை 16 என்று படக்குழு அறிவித்துள்ளது. இதுவொருபுறம் இருக்க, கே.ஜி. எஃப்’ படத்தின் நாயகன் யாஷுக்கு இந்தியா முழுவதும் தீவிர ரசிகர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் ஒருவரான கர்நாடகாவைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்ற இளைஞர் தனது தனிப்பட்ட பிரச்னைகளுக்காக மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவர் தற்கொலை செய்வதற்குமுன் எழுதிக்வைத்துள்ள கடித்தத்தில் ‘தனது இறுதிச்சடங்கில் நடிகர் யாஷும், கர்நாடக எதிர்கட்சித் தலைவர் சித்தராமையாவும் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும். அதுதான், எனது கடைசி ஆசை’ என்று குறிப்பிட்டிருந்தார். வாக்கு அரசியலை பின்பற்றும் அரசியல்வாதியான கர்நாடகா எதிர்கட்சித் தலைவரான சித்தராமையா, அந்த ரசிகரின் விருப்பப்படி தற்கொலை செய்துகொண்ட ராமகிருஷ்ணாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டார்.
ஆனால் யாஷ் கலந்துகொள்ளவில்லை. அப்படி ரசிகரின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டால், அது மற்றவர்களுக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும் என்பதால் தனது ரசிகர்களுக்கு அன்போடும் அக்கறையோடும் வேண்டுகோள் விடுத்துள்ளார். தனது சமூக வலைதளப் பக்கத்தில் இதுகுறித்து, முட்டாள் ரசிகர்களுக்கு சூடு கொடுப்பதுபோல பதிவிட்டிருக்கும் யாஷ்.. “நாங்கள் நடிகர்கள். உங்கள் கைத்தட்டலையும் விசிலையும் கேட்கவும் நீங்கள் எங்கள் மீது பொழியும் அன்புக்காகவும் வாழ்கிறோம். ரசிகர்களிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை” என்று நெத்தியடியாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இணைப்பினில் அழுத்தி புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்