கோடம்பாக்கம் Corner

மாநாடு நாயகன் சிம்பு அண்மையில் திடீரென உத்திரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றுள்ளார்.

அங்கு பிரசித்திப் பெற்ற கங்கை ஆற்றில் நேற்று இரவு தீபம் ஏற்றியுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

பலரும் திருமணம் சரியான காலத்தில் நடக்காமல் அவதிப்படுவதும், திருமணம் நடந்தும் குழந்தைப் பேறு இல்லாமல் இருப்பவர்கள் பெரும்பாலும் நாக தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர். ஜோதிடத்தின் படி நாக தோஷம் என்பது திருமண ஸ்தானமான 7ம் வீட்டில் ராகு இருப்பதால் நாக தோஷம் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், 1,2,5,7,11 ஆகிய இடங்களில் ராகு அல்லது கேது அமைந்திருப்பதால் திருமணம் அல்லது குழந்தை பேறு ஏற்படுவதில் தாமதம் சிக்கல் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் 2, 8ம் இடங்களில் ராகு - கேது பார்வை ஏற்பட்டிருந்தாலும் இந்த தோஷம் ஏற்படக் கூடுமாம்.

இதற்கான பரிகாரத்தில் ஒன்றுதான் படகு தீபம். கங்கை நதியில் மாலை வேளையில் வாழை மட்டையின் மீது தீபம் ஏற்றி வைத்தும், படகு வடிவங்களில் தீபங்கள் ஏற்றி வைத்தும் கங்கையில் மிதக்கவிடுவதற்குப் பெயர் படகு தீபம் ஆகும். லிட்டில் சூப்பர்ஸ்டார் சிம்புவும் பரிகாரமாக செய்துவிட்டு சென்னை திரும்பி இருக்கிறார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.