கோடம்பாக்கம் Corner

‘வாரணம் ஆயிரம்’ ஷமீரா ரெட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்கமுடியாது. கௌதம் மேனன் இயக்கத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் ஷமீரா ரெட்டி.

கடந்த 2002-ல் இந்தித் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகள் இந்தியாவின் பலமொழிகளில் நடித்தார். சூர்யாவைத் தொடர்ந்து விஷால், ஆர்யா, மாதவன் ஆகிய முன்னணிக் கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்தார். ஆனால், தமன்னா, நயன்தாரா உள்ளிட்ட கதாநாயகிகளுடன் அப்போது அவரால் போட்டி போடமுடியாமல், தனது 35-வது வயதில் அக்‌ஷய் வர்தன் என்ற டெல்லிவாழ் தொழிலதிபரைத் திருமணம் செய்துகொண்டு திரையுலகிலிருந்து வெளியேறினார்

ஷமீரா - அக்‌ஷய் தம்பதிக்கு முதலில் ஆண்குழந்தை (ஹன்ச வர்தன்) பிறந்தது. முதல் பிரசவத்திற்கு பிறகு எடை கூடி 100 கிலோவை தாண்டிவிட்டார் ஷமீரா. அவரை பார்த்தவர்கள் நடிகை ஷமீரா ரெட்டியா என்று வியந்தனர். அதன் பிறகே ஒரு முடிவு எடுத்து தன் உடல் எடையை வெகுவாக குறைத்து பழையபடி மாறினார். முதல் பிரசவமே சிக்கலாக இருந்த நேரத்தில் மீண்டும் குழந்தை பெற்றுக் கொள்ள ஆசைப்பட்டார் ஷமீரா. இதை கணவரிடம் கூற அவரோ, முதல் பிரசவத்தில் நடந்ததை மறந்துவிட்டாயா என்று கேட்டிருக்கிறார். அதெல்லாம் பரவாயில்லை, எனக்கு இன்னொரு குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டு பெற்றார்.

பிரசவத்தின்போதும், பிள்ளை பிறந்த பிறகும் பெண்களின் உடல்நலம், எடை பிரச்சனை குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசி வருகிறார் ஷமீரா. இந்நிலையில் அவர் தற்போது சமூகவலைப் பக்கத்தில், “திருமணத்துக்கு முன் என்னைப் பார்த்து சொந்தம், பந்தம், ரசிகர்கள் என அனைவரும் ‘எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறாய்? எப்பொழுது குழந்தை பெறப் போகிறாய்?’ என்று துளைத்து எடுத்தார்கள். இந்த கேள்விகளை கேட்கும்போது எல்லாம் நான் பயந்தது உண்டு.

அதிலும் குறிப்பாக எனக்கு 35 வயதாகியும் திருமணமாகாமல் இருந்தபோது தான் மிகவும் பயந்தேன். வாழ்வு முழுமை பெற திருமணம் செய்து, குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பெண்களுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கிறார்கள். அது மன அழுத்தத்தை கொடுக்கிறது. அதன் பிறகு திருமணமாகிவிட்டால் குழந்தை பெறும் வரை ஏதாவது சொல்லிக் கொண்டே இருப்பார்கள். குழந்தை பிறந்துவிட்டால் இன்னொன்று பெற்றுக் கொள்வீரா என்று கேட்பார்கள். அதற்கும் நாம் விளக்கம் அளித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

திருமணம் செய்து கொள்ள வேண்டுமே என்பதற்காக பயத்திலோ, அவசரத்திலோ முடிவு எடுக்கக் கூடாது. உங்களது எண்ணத்தை மாற்றுங்கள். திருமணம் உண்மையில் சொர்க்கத்தில் நிச்சயக்கப்படுகிறது. குழந்தைகள் வானிலிருந்து கிடைக்கும் வரம். என் மகனும் மகளும் அதைத்தான் எனக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறார்கள்” என நெகிழ்ந்து கூறியிருக்கிறார் ஷமீரா.

-மாதுமை

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.