கோடம்பாக்கம் Corner

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மறைந்த ஜெ, ஜெயலலிதாவின் வாழ்க்கையுடன் சுவாரஸ்யத்துக்காக கற்பனையையும் கலந்து சொல்லும் படமாக, உருவாகியிருக்கிறது தலைவி. அந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு, நேற்று சென்னை லீலா பேலஸ் ஐந்து நட்சத்திர ஹோட்டலி நடந்தது.

அதில், ஜெயலலிதாவாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆராக நடித்திருக்கும் அரவிந்தசாமி, கலைஞர் மு.கருணாநிதி போன்ற வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனி உள்ளிட்ட பலருடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். அந்தவிழாவில் பிரபலங்கள் பேசியவற்றின் சுருக்கமான தொகுப்பு இது:

நடிகர் தம்பி ராமையா பேசும்போது:

எல்லா படங்களும் போல் இந்த படம் நூற்றில் ஒன்றல்ல, நூற்றாண்டுகளில் ஒன்று. 1965-1980 காலங்களில் ஜெயலலிதா அம்மையாரை தவிர்த்து தென்னிந்திய படங்களை பார்க்க இயலாது. அதுபோல் 1982-ல் ஜெயலலிதா அவர்கள், தன்னை அதிமுக-வில் இணைத்து கொண்டபிறகு. 1982-2016 வரை இந்திய அரசியலை அவரை தள்ளிவைத்து பார்க்க இயலாது. சினிமா வாழ்வில், அரசியல் வாழ்விலும் பெரும் ஜாம்பவானாக இருந்த ஜெயலலிதா அம்மையார் பற்றிய படம்.. இந்திராகாந்தி அம்மையார், மம்தா பேனர்ஜி, மாயாவதி, ஜெயலலிதா அம்மையார் இவர்கள் நான்கு பேரையும் கலந்தார் போல் கங்கனா ரனாவத் உள்ளார். திறமை இருக்கும் இடத்தில் திமிரு வரும், கர்வ திறமை கொண்ட தேவதை, அவருடன் நடிக்கும்போது அதை நான் பார்த்தேன், அவருடன் நடித்ததில் மகிழ்ச்சி கொள்கிறேன். தியாகராஜா பாகவதர், எம் ஜி ஆர், கமல், அஜித்குமார், இவர்கள் அனைவரும் அழகின் உச்சம், இவர்கள் அனைவரின் கலவையாக அரவித் சாமி உள்ளார். எம்ஜிஆர் கதாபாத்திரத்திற்கு இவர் தவிர யாரும் பொருத்தமாக இல்லை.

நடிகர், இயக்குநர் சமுத்திரகனி பேசும்போது:

மிகப்பெரும் ஜாம்பவான்கள் பங்கு கொண்டிருக்கும் படத்தில் நானும் இருப்பது மிகப்பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இயக்குநர் விஜய்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 1000 பக்கங்கள் கொண்ட "ஆர் எம் வி ஒரு தொண்டர்" எனும் புத்தகத்தை படிக்க சொன்னார். படித்து வியந்து விட்டேன். இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா, என ஆச்சர்யகரமாக இருந்தது. என்னால் அவரைப்போல் நடிக்க முடியுமா என பயமாக இருந்தது. இயக்குநர் விஜய் ஊக்கம் தந்து நடிக்க வைத்தார். எம் ஜி ஆரை நான் படத்தில் மட்டுமே பார்த்திருக்கிறேன். ஆனால் இப்படத்தில் 15 நாள் அவர் கூடவே இருந்தது போல் இருந்தது. நண்பர் அரவிந்த்சாமி அவரை தத்ரூபமாக திரையில் கொண்டுவந்துள்ளார். சிறு சிறு விசயங்களிலும் மெனெக்கெட்டு உழைத்தார். கங்கனா ஜெயலலிதா அம்மாவின் ஆவி புகுந்தது போல் செய்திருக்கிறார். நிச்சயம் அவரது உழைப்பு பாராட்டு பெறும். நான் இப்படத்தில் சிறப்பாக நடித்திருக்கிறேன் என்றால், அதற்கு இயக்குநர் விஜய் தான் காரணம். அவர் துளித்துளியாக படத்தை செதுக்கியுள்ளார். படம் நன்றாக வந்துள்ளது அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

பாடலாசிரியர் மதன் கார்கி பேசியதாவது..

முதலில் கங்கனாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். தேசிய விருது பெற்றிருக்கிறார். அடுத்த வருடம் இப்படத்திற்காகவும் விருதை பெற வாழ்த்துக்கள். பாடலாசியராக மட்டுமல்லாமல் திரைக்கதையிலும் பட உருவாக்கத்திலும் பணிபுரிந்தது புது அனுபவமாக இருந்தது. இப்படத்தின் திரைக்கதைக்காக விஜயேந்திர பிரசாத் உடன் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். திரைக்கதை பற்றிய அவரது பார்வை, நிறைய கற்று தந்தது. இந்த மாதிரி கதைகள் செய்யும்போது எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும் ஆனால் இயக்குநர் விஜய் தெளிவாக இருந்தார். ஜெயலலிதா அவர்களின் வாழ்வின் நல்ல தருணங்களை சொல்லப் போகிறோம் என்றார். கங்கனா இப்படத்தில் மிகப்பெரும் பணியை செய்துள்ளார். எல்லோருக்கும் அவர் இந்த பாத்திரத்தை செய்ய முடியுமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் படம் பார்த்த போது அந்த தடைகள் அனைத்தையும் உடைத்து மிக சிறப்பாக செய்துள்ளார். அரவிந்த் சாமி இப்படத்திற்காக மிகப்பெரும் உழைப்பை தந்திருக்கிறார். படத்தில் ஒவ்வொருவருமே கடுமையான உழைப்பை தந்துள்ளார்கள். படம் பிரமாண்டமாக வந்துள்ளது. இப்படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி.

இசையமைப்பாளர் ஜீ வி பிரகாஷ்:

தலைவி இந்திய சினிமாவில் மிக முக்கியமான படமாக இருக்கும். மிகப்பெரும் ஆளுமைகள் இப்படத்தில் பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் இசை ஒரு காலகட்டத்தை சொல்வதாக இருக்கும். அந்த காலகட்டத்தை இசையில் கொண்டுவர முயற்சித்துள்ளேன். ஜெயலலிதா அம்மாவிற்கு ஒரு தனி இசை தொகுப்பை உருவாக்கியிருக்கிறேன். உங்கள் அனைவரும் பிடிக்கும் என நம்புகிறேன்.

எஸ்.எஸ்.ராஜமௌலியின் தந்தை, இந்தப் படத்தின் திரைக்கதை ஆசிரியர் விஜயேந்திர பிரசாத்:

தலைவி எனக்கு ஒரு மிகச்சிறப்பான பயணமாக இருந்தது. படத்தை பற்றி அவர்கள் தந்த தகவல் தொகுப்புகள், பிரமிக்க தக்க வகையில் இருந்தது. நடிகை கங்கனா எனக்கு ஜெயலலிதா பற்றி அதிகம் தெரியாது, நான் எப்படி தயாரவது என்று கேட்டார். நீங்கள் நீங்களாக இருங்கள் போதும் என்று சொன்னேன். யாருக்கும் தலைவணங்காத, சுயமதிப்பு கொண்ட, இரும்பு பெண்மணி ஜெயலலிதா. கங்கனாவும் அதே போன்றவர் தான். தேசிய விருதை வென்றுள்ளார் தலைவி படத்தலைப்பு போல் ஒரு நாள் அவரும் தலைவியாக வாழ்த்துக்கள்.

படத்தின் இயக்குனர் ஏ.எல். விஜய் கூறியதாவது

இப்படத்திற்காக இரு வருடங்கள் முன் தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகிய போது, சிறு தயக்கம் இருந்தது. பின்னர் இப்படம் செய்ய வேண்டும் என ஒப்புகொண்டேன். எழுத்தாளர் விஜயேந்திர பிரசாத் அவர்களுடன் வேலை செய்தது, மீண்டும் பள்ளி செல்வது போல், மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். அரவிந்த் சாமி அவர்கள் நடித்தது படத்திற்கு மிகப்பெரிய பலம், அவருடைய உழைப்பின் மூலம் இந்த படத்தை மிகவும் சிறப்பாக ஆக்கியுள்ளார். ஜீவி எனக்கு ஒரு குடும்ப உறுப்பினர் போல, அவருடைய பங்கு இந்த படத்தில் மிகப்பெரியது, அவருடைய பாடல்கள் இந்த படத்தில் பெரிதாக பேசப்படும். மதன் கார்க்கி, அஜயன் பாலா இருவரும் இந்த படத்தில் பெரும் பங்குவகுகித்துள்ளனர். பாக்கியஸ்ரீ, தம்பி ராமையா, மதுபாலா மூவரும் அவர்களுடைய சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர். சமுத்திரகனி அவர்களின் பங்களிப்பிற்கு மிக்க நன்றி. இணை தயாரிப்பாளர்கள் திருமல், ரித்தேஷ், சைலாஷ் அவர்களுக்கு நன்றி. நான்கு தேசிய விருது பெற்ற நடிகை கங்கனா அவர்களுடன் வேலை செய்தது மிகவும் மகிழ்ச்சி, அவருடைய திறமை அளப்பறியது, கதையினை உணர்ந்து நடிப்பார். எடை கூடுதல், குறைப்பது என இப்படத்தில் அவரது பங்கு அதிகம். அரசியல் கதையாக பார்க்காமல், ஆணாதிக்கம் மிகுந்த சமூகத்தில் ஒரு பெண்ணாக வெற்றி பெற்ற, ஒரு பெரும் ஆளுமையை பற்றிய படமாக இது இருக்கும்.

நடிகர் அரவிந்த் சாமி பேசியதாவது....

ஒன்றறை வருட பயணம் இது. இம்மாதிரியான படத்தில் அனைவரையும் ஒருங்கிணைத்து எனக்கும் வாய்ப்பு தந்தற்கு, தயாரிப்பாளர்களுக்கு நன்றி. இப்படத்தில் வரும் அனவைருமே, வரலாற்று நாயகர்கள். இப்படிபட்ட படத்தில் எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் விஜய்க்கு நன்றி. இப்படத்தில் மிகப்பெரும் ஆளுமைகள் ஒன்றிணைந்து பணியாற்றீயுள்ளார்கள் அவர்களால் தான் இப்படம் சாத்தியமாகியுள்ளது. கங்கனா அற்புதமாக நடித்துள்ளார். சமுத்திரகனி, தம்பி ரமையா, நாசருடன் பணிபுரிந்த அனுபவம் மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோரும் இப்படத்தில் நடிக்க நான் கஷ்டப்பட்டு உழைத்ததாக கூறினார்கள். ஒரு கதாபாத்திரத்திற்கு என்ன வேண்டும் என்று நமக்கு முதலிலேயே தெரியும் அதை செய்ய வேண்டியது நம் கடமை. நான் இஷ்டப்பட்டு மகிழ்சியுடன் தான் இப்படத்தை செய்தேன் படம் நன்றாக வந்துள்ளது. நன்றி

நடிகை கங்கனா ரனாவத் பேசியதாவது...

"தலைவி" திரைப்படத்திற்காக முதலில் என்னை அணுகியபோது முதலில் நடிக்க தயங்கியனேன். பிறகு இயக்குனர் விஜய் தான் வற்புறுத்தி ஒப்புக் கொள்ள வைத்ததார். மேலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு திரைப்படத்திற்கு அரவிந்த்சாமி மாதிரியான ஒரு ஹீரோ அளித்த ஒத்துழைப்பு மிக முக்கியமானது. பாலிவுட்டில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ஹீரோவுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் எனக்கு கொடுக்கப்பட்டதே இல்லை தலைவி படத்தில் இயக்குனர் விஜய் என்னை மிகவும் மரியாதையுடன் நடத்தினார்.

என் திறமைக்கு மதிப்பளித்தார்{ அவர் இதனை கூறியபோது கண்கலங்க்கினார் } என்னை முழுதாக இப்படத்திற்காக வடிவமைத்துள்ளார். இப்படத்தில் நடித்த பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இப்படம் மொத்த இந்தியாவிற்கானது. அனைவருக்கும் பிடிக்கும். தமிழில் இன்னும் நிறைய படங்கள் செய்ய ஆசைப்படுகிறேன் நன்றி

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.