ஆஸ்கர் தமிழன். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முறையாக கதை, திரைக்கதை எழுதி தயாரித்து இசையமைத்துள்ள காதல் கதை, தமிழ், இந்தி மற்றும் தெலுங்கில் வெளியாகிறது.
திரைப்படத்தை பற்றிய தகவல்களை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் ரஹ்மான், “என்னுடைய தயாரிப்பு நிறுவனமான ஒய் எம் மூவிஸின் சார்பாக இந்த பரீட்சார்த்தமான திரைப்படத்திற்காக ஜியோ ஸ்டூடியோஸுடன் இணைவது மகிழ்ச்சியளிக்கிறது. பழைய மற்றும் புதிய உலகங்களுடனான ஒரு மனிதனின் போராட்டமே ‘99 சாங்ஸ்’படத்தின் மையக் கருவாகும். அதற்கான மாற்று மருந்தாக இசை அமைகிறது.
இத்திரைப்படத்தின் இயக்குநர் விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் திறமைமிக்க நடிகர்களான ஏஹன் பட் மற்றும் எடில்ஸி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி அடைகிறேன். மனிஷா கொய்ராலா மற்றும் லிசா ரே போன்ற புகழ்பெற்ற நட்சத்திரங்கள் மற்றும் ரஞ்சித் பாரோட் மற்றும் ராகுல் ராம் போன்ற இசை மேதைகளுடன் இணைந்து பணிபுரிந்தது சிறந்த அனுபவமாக இருந்தது,” என்றார்.
வரும் ஏப்ரல் 16 சித்திரைத் திருநாளை முன்னிட்டு அன்று தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் இந்தியா முழுவதும் ‘99 சாங்ஸ்’ வெளியாகிறது. ஜியா ஸ்டூடியோஸால் வெளியிடப்படவுள்ள இத்திரைப்படத்தை ஏ ஆர் ரஹ்மானின் ஒய்.எம். மூவிஸ் ஐடியல் என்டெர்டைன்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருக்கிறது.