கோடம்பாக்கம் Corner

பாலிவுட்டின் பிக் பி அமிதாப் பச்சனுக்கு திரைப்படக் காப்பகங்களுக்கான சர்வதேசக் கூட்டமைப்பு, விருது வழங்கி கௌரவித்துள்ளது. உலகம் முழுக்க படச்சுருள் உட்பட பழமையான தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட கிளாசிக் படங்களை அழியாமல் பாதுகாக்க செயல்படும் அமைப்பு இது.

இதில் இந்தியாவின் திரைப்பட வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்கும் கிளாசிக் படங்களைப் பாதுகாப்பதற்கு உறுதுணையாக இருப்பதற்காக அமிதாப்புக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதை வென்றிருக்கும் முதல் இந்தியர் அமிதாப். இந்த விருதை அமிதாப்புக்கு ஹாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களான மார்ட்டின் ஸ்கார்சஸியும் கிறிஸ்டோபர் நோலனும்தான் வழங்கியுள்ளனர்.

“மிகப் பழமையான திரைப்படங்கள், கடந்த 50 ஆண்டுகளில் தயாரான படங்களை பாதுகாக்க இந்தியா செய்யும் பணிகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். அமிதாப் இதற்காக எடுத்த முயற்சிகளையும் அறிவேன். இந்த வருடம் இந்த விருதைப் பெற அமிதாப்பைத் தவிரத் தகுதியானவர் யாருமில்லை” என்று புகழ்ந்திருக்கிறார் மார்ட்டின் ஸ்கார்சஸி.

இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் “அமிதாப் பச்சனின் இந்தப் பணி, கைவிடப்படும் நிலையில் இருக்கும் திரைப்படங்களை காப்பாற்றி வைப்பதற்கான முன்னெடுப்பிற்குப் பெரிதும் உதவியிருக்கிறார்.” என்று மனம்விட்டுப் பாராட்டியிருக்கிறார். இந்த விருதானது படச் சுருள்களின் நெகட்டிப் பாதுகாத்துவைக்கப்படும் ரீல் பாக்ஸ் வடிவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.