கோடம்பாக்கம் Corner

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள 'சுல்தான்' படம் அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகத்திலும் மலேசியா, சிங்கப்பூர், இலங்கை ஆகிய நாடுகளிலும் வெளியாகிறது.

இதையொட்டி ஊடகங்களுக்கு பேட்டியளித்தார் அப்படத்தின் கதாநாயகனாக நடித்துள்ள கார்த்தி.அப்போது கார்த்தி பேசும்போது:

பாக்கியராஜ் சுல்தான் கதையை பற்றி ஒரு வரியில் கூறும்பொழுது, தந்தைக்காக இவன் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும். ஆனால், இவனுக்கு வாழ்க்கை லட்சியமே வேறு. ஆனால் தந்தை கூறியதை செய்யலாமா வேண்டாமா என்று ஒரு குழப்பம். இருப்பினும் நம் வாழ்வில் வருத்தப்படக்கூடிய விஷயம் நாம் செய்யாமல் தவறவிட்ட செயல்கள்தான். ஆகையால் நான் இந்த முயற்சியில் தோல்வியுற்றாலும் பரவாயில்லை. அப்பா சொல்வதற்காக செய்கிறேன் என்று முடிவெடுக்கிறான் சுல்தான். அதன் பிறகுதான் அவனுக்கு தெரிகிறது நூறுபேரை சமாளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் ரவுடிகள். அவர்களை எப்படி கட்டி மேய்க்கிறான் என்கிற சவால்தான் சுல்தான் திரைப்படம். 20 நிமிடங்கள் தான் பாக்கியராஜ் கண்ணன் இக்கதையைக் கூறினார்.கேட்ட உடனே ஒப்புக் கொண்டேன்.

பிறகு, தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவிடம் இக்கதையை கேளுங்கள் என்று கூறினேன் அவரும் கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்றார். அதன் பின்பு, உணர்வுகள் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூற , பாக்கியராஜ் கண்ணன் அதை அமர்க்களமாக ரெடிபண்ணினார். அதேபோல், நகைச்சுவை கதையில் தானாகவே வந்து அமர்ந்துவிட்டது. இப்படத்தில் என்னை சுல்தான் என்று லால் சார் செல்லமாக அழைப்பார்.

யோகிபாபுவுடன் முதன்முதலாக இணைந்து இப்படத்தில் நடிக்கிறேன். அவரைப் பற்றி கூறவே வேண்டாம். அதுவும், உணவகத்தில் அவர் செய்யும் நகைச்சுவையில் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தோம். நீங்கள் படம் பார்க்கும்போது உங்களுக்கு தெரியும். ‘ஓட்ட லாரி’ என்று கதாபாத்திரத்தைக் கூறியதுமே யோகிபாபுதான் நினைவிற்கு வந்தார். யோகிபாபு இக்கதையில் முக்கிய திருப்பு முனைக்கு காரணமாக இருப்பார். இக்கதையை நெப்போலியனிடம் கூறியதும் அவரும் சம்மதம் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தாலே அவ்வளவு போராட்டம் வருகிறது. ஆனால், 100 பேர் இருந்தால் அந்த இடம் எப்படி இருக்கும் என்பதை நீங்களே யோசனை செய்து கொள்ளுங்கள். அங்கு, நகைச்சுவை, சண்டை, கேலி.. கிண்டல், அவமானம் என்று அனைத்தையுமே கொண்டுவர முடியும். அதற்காக ஒன்றரை வருட காலம் நேரம் எடுத்து கதையை மெருகேற்றினார்.

இப்படத்தில், இன்னொரு சவாலான விஷயம் 100 பேரையும் காட்சிக்குள் கொண்டு வருவதுதான். அதேபோல், இப்படத்தில் எழுந்த இன்னொரு சிக்கல், எந்த லென்ஸ் போட்டு 100 பேரையும் ஒரே காட்சியில் அடைப்பது என்கிற குழப்பம் தீரவே இரண்டு, மூன்று நாட்கள் ஆனது. மேலும், தந்தை கூறியதற்காக 100 பேரை சமாளித்து விடலாம் என்று நினைக்கும்பொழுது, நிலைமை கைமீறி போகின்றது. அப்பொழுது தான் கதை தீவிரமாக போகின்றது. இப்படம் ஒரு நல்ல பொழுதுபோக்கான படமாக நிச்சயம் இருக்கும். 100 பேர் இருந்தாலும், இறுதிக் காட்சியில் அனைவரையும் ஒருங்கிணைத்து அழகாக கையாண்டிருக்கிறார் இயக்குநர்.

ராஷ்மிகா இப்படத்தில் எனக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அவர் அப்பாவுடன் சிறுவயது முதலே தமிழ் படங்களை பார்த்து வந்திருக்கிறார். நீண்ட நாட்களாக அவர் கிராமத்து பெண் பாத்திரத்திற்காக காத்திருந்திருக்கிறார். இப்பட வாய்ப்பு கிடைத்ததும் எனக்கும், அப்பாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார். அதேபோல் படத்திலும் அவரது கதாபாத்திரத்தை ரசித்து செய்தார். படப்பிடிப்பு தளத்திலும் இயல்பாக அனைவருடனும் பழகுவார். நாடு முழுவதும் அவர் பிரபலமடைந்த பிறகும் அவர் இயல்பாக இருப்பது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்.

இப்படத்தின் படிப்பிடிப்பு கடவூரில் நடத்தினோம். அந்த ஊர் மக்கள் மிகவும் பாசத்தோடு பழகினார்கள். தினமும் பலவித உணவு ஆசையாக கொடுத்தார்கள். அங்குள்ள சிறுவர்கள் நடிகர் என்பதை மறந்து அண்ணா, வாங்க அண்ணா கிரிக்கெட் விளையாடலாம் என்று அழைப்பார்கள். எனது ஒவ்வொரு படமும் இயக்குநர்களின் இரண்டாவது படமாக அமைவது திட்டமிட்டு நடப்பது அல்ல, தானாக நிகழ்வது. இப்படத்திற்கு பிறகு இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறேன். முத்தையா இயக்கத்தில் ஒரு படமும் பி.எஸ்.மித்திரன் இயக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறேன். பொன்னியன் செல்வன் படத்திற்காக நான் நிறைய புத்தகம் படிக்க வேண்டியிருந்தது. அப்போது 1000 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் நிர்வாகம், நீர் மேலாண்மை போன்ற விஷயங்களை அறிந்து கொள்ள முடிந்தது. என் அண்ணன் சூர்யா, அவர் நடித்த ‘சூரரைப் போற்று’ படத்தை ஓடிடி-யில் வெளியிட்டு வெற்றி பெற்றார். நீண்ட நாட்கள் வெளியாகாமல் இருந்தால் அப்படத்திற்காக பணியாற்றியோர் பலரின் வாழ்க்கை அடுத்த நிலைக்கு செல்லாது என்பதற்காக இம்முடிவை எடுத்தார். மேலும், அப்படம் ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்பட்டதில் மகிழ்ச்சி.

கொரோனா காலத்தில் அப்பாவிடம் கேட்டு சில புத்தகங்களைப் படித்தேன். இயல்பு வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதேபோல், சோழர்களின் வரலாற்றை ஆராய்ச்சி செய்யும் எனது நண்பர்களிடம் கேட்டு சில புத்தகங்கள் படித்தேன். மேலும், கொரோனா காலத்தில் வீட்டில் மாடித் தோட்டம் அமைத்து அதில் விளைந்த புடலங்காய், கீரை போன்ற பல காய்கறிகளை அறுவடை செய்து சாப்பிட்டோம். எனது அம்மா நமது மாடித் தோட்டத்தில் விளைந்தது என்று மகிழ்ச்சியாக கூறி பரிமாறுவார். எங்கள் வீட்டில் எப்போதும் சிறு தானிய உணவுகளைத் தான் உண்போம். இந்த வகையான உணவுகளை சாப்பிட பழகி விட்டால் மற்ற உணவுகள் பிடிக்காது. சென்னையில் கிடைப்பதெல்லாம் பாலிஷ் செய்யப்பட்டது. ஆகையால், இயற்கையான உரம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு பொருட்களை நேரடியாக சென்று வாங்கி வருவோம். உணவு விஷயத்தில் அப்பா மிகவும் கடுமையாக பின்பற்றுவார். மாலை 4 மணிக்கு மேல் எண்ணெயில் சமைத்த உணவை எடுத்துக் கொள்ள மாட்டார். என் மனைவி வந்த பிறகு வெள்ளை சர்க்கரையை முழுவதும் தவிர்த்து விட்டோம். கேக் செய்வதற்கு கூட நாட்டுச் சர்க்கரை தான் சேர்ப்போம்.” என்று தனது 'சுல்தான்' பட அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் கார்த்தி.

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

சிவகார்த்திகேயன் - இயக்குநர் நெல்சன் - இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் உருவான ‘கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் எழுதிய பாடல்கள் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

சாதிய வன்மத்தின் முகம் தமிழகத்தில் புரையோடிக் கிடக்கிறது என்பதற்கு அரக்கோனத்தை அடுத்த சோகனூர் கிராமம் உதாரணமாகியிருக்கிறது. நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னரான சாதிய வன்முறையில் இரண்டு தலித் இளைஞர்கள் அங்கே அடித்து கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

ராசம் மெல்ல அனுங்கிக் கொண்டிருந்தாள்.
தலைவாசல் அறைக்குள்ளிருந்து கேட்ட அவள் அனுங்கலில் “வேம்பி..!”

கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையை, இஸ்ரலேல் உள்ளிட்ட உலகின் பல நாடுகள் திறம்பட சமாளித்து வரும் வேளையில் இந்தியா அதில் கோட்டை விட்டுவிட்டதாக இந்திய ஊடகங்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

பிரபல சமூக வலைதளமான ட்விட்டரில் மோடி பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்று #reginmodi என்கிற ஹேஷ் டேக் இந்திய அளவில் பிரபலமாகி வருகிறது.

நாம் வாழும் பூமியின் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும் மாசாடையாமால் பாதுகாக்கவும் ஒவ்வொரு ஏப்ரல் 22 ஆம் திகதி புவி தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.