அதிமுக தலைமையிலான அரசு தமிழக ஆட்சிக் கட்டிலில் இருந்தபோது, கடந்த 2004-ஆம் ஆண்டு, தமிழக அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவர் சந்தனக் கடத்தல் வீரப்பன்.
இவருடைய வாழ்க்கை வரலாற்றை பறைசாற்றும் வகையில் பல்வேறு ஒரு மெகா தொடர், இரண்டு திரைப்படங்கள் வெளியாகியிருக்கின்றன. இந்நிலையில், தற்போது வீரப்பனின் மகள், அப்பாவின் பெயரை சொல்லும் விதத்தில் 'மாவீரன் பிள்ளை' என்கிற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
வீரப்பனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் வித்யாராணி. இளைய மகள் விஜயலட்சுமி. மூத்த மகள் வித்யாராணி கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்தார். இளைய மகள் விஜயலக்ஷ்மி, வேல்முருகனின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வரும் நிலையில், தற்போது பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலைகள் எந்த அளவிற்கு முக்கியம் என்பது குறித்த கதையில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் இன்று வெளியாகியிருக்கிறது. டீசரில் இடம்பெற்றுள்ள “ எங்க பொண்ணுக மேல கை வைச்சி பாரு பார்ப்போம். கிழிச்சி தொங்க விட்டுடுவாளுங்க, எல்லா சரக்கையும் அடிச்சி உடைங்கடா!” போன்ற வசங்கங்கள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளன.
படத்தின் டீசர்!