கோடம்பாக்கம் Corner
Typography

தென்னமெரிக்க நாடான எக்குவடோர் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.

நேற்று சனிக்கிழமை 200 தாவர வகையைச் சேர்ந்த சுமார் 647 250 மரங்களை ஒரே தடவையில் ஆயிரக் கணக்கான மக்கள் நட்டு இந்த சாதனையைப் படைத்திருப்பதாக எக்குவடோர் அதிபர் ரஃபேல் கொர்ரேயா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தகவல் தனக்குத் தற்போது தான் கிடைத்ததாகவும் இதன் மூலம் காடு வளர்ப்புத் திட்டத்தில் முன்னைய கின்னஸ் சாதனையைத் தாம் முறியடித்திருப்பதாகவும் அதிபர் கொர்ரேயா மகிழ்ச்சியுடன் தனது வாராந்த அறிவிப்பின் போது தெரிவித்துள்ளார். உயர் அந்தீஸ் மலைச் சிகரங்களையும்  தாழ்ந்த அமேசன் வனப் பகுதியையும் கொண்டுள்ள எக்குவடோரின் அனைத்துப் பாகங்களிலும் இந்த மரநடுகை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இது குறித்து சுற்றுச் சூழல் அமைச்சார் லொரேனா டாப்பியா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் 44 883 பொது மக்கள் ஒன்று கூடி 2000 இற்கும் அதிகமான ஹெக்டேர் நிலப் பரப்பில்  இந்த சாதனையை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின் தகவல் படி இதற்கு முன்னர் இந்தளவு எண்ணிக்கையில் 150 இற்கும் அதிகமான வகைகளில் காடு வளர்ப்புத் திட்டம் எதுவும் செயற்படுத்தப் படவில்லை என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

எக்குவடோரின் 150 பகுதிகளில் இந்தச் சாதனையில் ஈடுபட்ட தொண்டூழியர்கள் பலர் கருத்துத் தெரிவிக்கையில் தாம் இதன் மூலம் மிகவும் பெருமை அடைவதாகவும் இந்த சாதனை மறுபடி உடைக்கப் பட்டால் இன்னமும் சந்தோசப் படுவோம் எனவும் கூறியுள்ளனர். உலகில் ஒரு மணித்தியாலத்தில் மிக அதிகளவு விதைகளை நட்ட கின்னஸ் சாதனை தற்போது பிலிப்பைன்ஸ் வசம் உள்ளது. கடந்த செப்டம்பரில் பிலிப்பைன்ஸில் நாடளாவிய ரீதியில் தேசிய காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு மணித்தியாலத்துக்குள் 3.2 மில்லியன் விதைகள் நடப்பட்டிருந்ததே இச்சாதனையாகும்.

உலகளாவிய ரீதியில் காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் அதிகளவு மரங்களை நடுவதனால் நமது காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்ஸைட்டின் அளவு குறைந்து ஆக்ஸிஜனின் வீதம் அதிகரிப்பதுடன் இதனால் பூகோள வெப்பமயமாதலும் குறையும் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

புதிய சிறுவர் கதை சொல்லி தமிழில் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்