தமிழ்நாட்டில் லாட்டரியை சீட்டை கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசாங்கம் ஒழித்துக்கட்டி 25 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், அஜித் கால்ஷீட் கிடைத்தால் தனதுக்கு பம்பர் லாட்டரி அடித்துவிட்டதாகவே நினைக்கும் தயாரிப்பாளர்கள் இன்றைக்கும் தமிழ்த் திரையுலகில் தவம் கிடக்கிறார்கள்.
கோடம்பாக்கம் Corner
திரையரங்குகள் இனி தேவையில்லை : தங்கர் பச்சான்
அனைத்து தேவைகளையும் மனிதன் சுருக்கிக்கொள்ளலாம். உயிர் வாழ்வதற்கு தேவையான உணவு, இருக்க இடம், அணிய உடை தவிர்த்து பொழுதுபோக்கு இல்லாமல் போனால் பித்துதான் பிடித்துப்போவான். ஊரடங்குக் காலங்களில் இந்த 780 கோடி மக்களில் பெரும்பாலானோருக்குத் துணையாக இருந்தது திரைப்படங்கள்தான் என்கிறார் இயக்குனர் தங்கர்பாச்சான்.
சூர்யா குடும்பத்தால் சினிமா அழிந்துவிடாது : கலைப்புலி தானு
தமிழ்திரையுலகில், திரையரங்க உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்குமான மோதல் நிலை மிக மோசமாக உள்ள நிலையில், அதனைத் தணிக்கும் வகையில் பிரபல தயாரிப்பாளர் கலைப்பலி தானு மிக நெகிழ்ச்சியாகச் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.
சினிமாவை வளர்த்தது யார்...? : திருப்பூர் சுப்பிரமணியன்
சினிமாவை வளர்த்தவர்கள் திரையரங்க உரிமையாளர்கள் எனக் கூறியுள்ளார் திருப்பூர் சுப்பிரமணியன். திரையங்க உரிமையாளர்கள் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்கள் உள்ளன.
சமந்தாவுக்கு 33 வயதா ?
சென்னை பல்லாவரம் என்ற புறநகர் பகுதியில் மிகச் சாதாரண ‘லோயர் மிடில் கிளாஸ்’ குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் சமந்தா. ‘போர்டிங்’ என அழைக்கப்படும் படிக்க வசதியில்லாத கிறிஸ்தவ வீட்டுப் பிள்ளைகளுக்கான சலுகையில் இலவசப் பள்ளிக் கல்வியை முடித்தவர். பள்ளிப் பருவம் முடியும் வரை சினிமாவே பார்க்காதவர் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
இப்படியும் ஒரு வெற்றி கொடுக்க முடியுமா ?
புத்தாயிரத்தின் உற்சாகத்தை விதைத்த வெகுசன தமிழ்த் திரைப்படங்களில் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’ முக்கியமான ஒன்று. இன்று வரைக்கும் சினிமா எடுப்பது குறித்தும், அதற்கு கதை பிடிப்பது பற்றியும் நண்பர்களுடன் ஒரு பீர் பாட்டிலின் மூடியை முகர்ந்து பார்த்தபடியே யோசித்து செய்து முடிப்பவர் என்று பெயரெடுத்த வெங்கட் குமார் கங்கை அமரன் என்னும் வெங்கட் பிரபு.
கமல்ஹாசனின் அதிசயப் பேனா !
உலக நாயகன் கமலஹாசன் எத்தனை சிறந்த நடிகரோ அத்தனை சிறந்த திரைக்கதை ஆசிரியரும் தான் என்பதை தேர்ச்சிமிக்க விமர்சகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். அவர் திரைக்கதை எழுதிய திரைப் படங்கள் அனைத்துமே வெற்றிபெற்றிருக்கின்றன. குறிப்பாக ‘குறுதிப் புனல்’, ‘ஹேராம்’ ‘விருமாண்டி’ போன்ற தரமான படங்கள் கமல் எனும் ‘சோதனை’ திரைக்கதையாசிரியரை எடுத்துக்காட்டுபவை எனலாம்.
More Articles ...
'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.
பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.
வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.
கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.
நடிகர் பிருத்திவிராஜை தமிழ் சினிமா ரசிகர்கள் நன்கு அறிவார்கள். காரணம் நேரடித் தமிழ்ப் படமான, கே.வி.ஆனந்த் இயக்கிய ‘கனா கண்டேன்’ படத்தின் மூலம் தமிழ் திரையில் அறிமுகமானார்.
தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.