யூடியூப் கோர்னர்

இறுதி ஆண்டின் குழும ஒப்படை முழுக்க இசை சம்பந்தபட்ட வடிவமைப்பு.

ஆக்கபூர்வமான திறனை வளர்ப்பதற்கும் புதிய யோசனைகளை உருவாக்குவதற்கும் எங்களைப் போன்றோருக்கு இசை பெரும் உதவி புரிவதுண்டு. பொதுவாக ஒப்படை வழங்கப்பட்டதுடன் காதுகளில் முதலில் நுழைக்கப்படுவது ''இசை காதணிக்கருவிகள்!"தான் ஆனால் இம்முறை இசையை மட்டுமே அடிப்படையாக கொண்டு ஒப்படை வழங்கப்பட்டது வியப்புதான். இலங்கையில் 70, 80 ஆண்டுக் காலப்பகுதியில் மிகப் பிரபலமான சிங்கள இசையமைப்பாளர் ஒருவரைப் பற்றியும் அவரது ஆவணங்களை திரட்டி வித்தியாசமான கண்காட்சி ஒன்றினை வடிவமைப்பதே இந்த குழு ஒப்படை.

ஆரம்பக்கட்ட தேடுதல்களில் இறங்கியிருக்கும் எமக்கு இந்த ஒப்படைக்கு தகுந்த உத்வேகத்தையும் யோசனைகளையும் தரும் வண்ணம் ஆவணத்திரைப்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது.

70 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் பிரபலமாகியிருந்த Sixto Rodriguez எனும் அமெரிக்க இசைக்கலைஞர் தற்கொலை செய்துகொண்டதாக பரவிய வதந்தி உண்மையானதா, அல்லது அவருக்கு நேர்ந்தது என்ன என தேடும் இரு ரசிகர்களின் பயணத்தை ஆழமான அதே நேரம் உயிரோட்டமாக தந்திருக்கும் ஆவணத்திரைப்படம்தான் ''Searching for Sugar Man"

பிரபல ஸ்வீடிஷ் திரைப்பட இயக்குனர் Malik Bendjelloul என்பவர் இதனை உருவாக்கியிருந்தார்.

2012ம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் ஹாலிவுட்டில் 85 வது அகாடமி விருதுகளில் சிறந்த ஆவணப்படம் அம்சத்திற்கான அகாடமி விருது பெற்றது. மேலும் சிறந்த ஆவணத்திற்கான BAFTA விருது, 66 வது பிரிட்டிஷ் அகாடமி திரைப்பட விருது என பல்வேறு விருதுகளை வசமாக்கியது.

யாருக்கும் எவருக்கும் தெரிந்திராத இசைக்கலைஞரை அவரது இசைத்தட்டுக்களின் குறிப்புகள் மற்றும் பாடல் வரிகளின் மூலம் அவரது இருப்பிடத்தை அறிய முயற்சிக்கும் தருணங்களும், இடையிடையே நேர்த்தியாக கோர்க்கப்பட்டிருக்கும் அவரது இசைப்பாடல்களின் பிண்ணனியும் அபாரமாக நம்மை திரைப்படத்துக்குள் ஈர்த்துக்கொள்கிறது.

நிச்சயம் ஒருமுறை பார்க்கவேண்டிய ஆவணத்திரைபடம். இதோ அதன் முன்னோட்டம்.


கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி உலகில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட 800,000 பேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

தெலுங்கு திரையுலகின் வசூல் ஸ்டார் எனப் பெயரெடுத்த மகேஷ் பாபு தனது பிறந்தநாள் அன்று தனது வீட்டில் மரக்கன்று ஒன்றை நட்டார்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.