யூடியூப் கார்னர்
Typography

சில நாட்களுக்கு முன்பு நேஷனல் ஜியோகிராஃபிக்ஸ் தொலைக் காட்சி நிறுவனம் விண்ணில் எடுக்கப் பட்ட முதல் 3D VR (3D Virtual Reality film) வீடியோவை வெளியிட்டிருந்தது.

விண்ணில் பூமியைச் சுற்றி வரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான ISS இனுள்ளேயும் அதன் புறத்தேயும் படம் பிடிக்கப் பட்ட இந்த முப்பரிமாண காணொளி விண்ணுக்குச் செல்ல முடியாத மனிதர்களுக்கு நல்லதொரு விருந்தாகும்.

One Srange Rock என்ற தொலைக் காட்சி நிகழ்வில் காட்டப் படத் திட்டமிடப் பட்ட ஒரு தொகுப்பாக பூமி விண்வெளி வீரர்களுக்கு எவ்வாறு தென்படுகின்றது என்ற தலைப்பின் கீழ் Humaneyes Technologies உடன் இணைந்து இந்த முப்பரிமாண காணொளியை நேஷனல் ஜியோகிராஃபிக்ஸ் உருவாக்கி உள்ளது.

Vuzu VR எனும் அதி நவீன வேர்ஜுவல் ரியாலிட்டி கமெராவால் இக்காணொளி படம் பிடிக்கப் பட்டுள்ளது. மே மாதம் 28 ஆம் திகதி நேஷனல் ஜியோகிராஃபிக்ஸ் சேனலில் இந்த முப்பரிமாண காணொளி காட்டப் படவுள்ளது. இதைப் பார்க்க முடியாதவர்கள் கீழ்வரும் இணையத் தளத்துக்குச் சென்றும் பார்வையிட முடியும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

பகிர்வதற்கு

 

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்