யூடியூப் கோர்னர்

வெளியாகிய மூன்று நாட்களுக்குள் யூட்டியுப்பில் ஆறு மில்லியன்களுக்கும் அதிகமான தடவைகள் பார்த்து இரசிக்கப்பட்டிருக்கிறது " வாயாடி பெத்த புள்ள, வரப்போறா நெல்லைப் போல, யாரிவ.." பாடல்.

சிவகார்த்திகேயனின் சொந்தத் தயாரிப்பான " கானா " திரைப்படத்தில் வரும் இப்பாடலை, தன் மகள் ஆராதனாவுடனும், வைக்கம் விஜயலட்சுமியுடனும் இனைந்து சிவ கார்த்திகேயனும் பாடியுள்ளார்.

பாடலை ஆராதனாவின் குரலும், நளினமும், இதமாகக் தொடங்கி வைக்க, சிவகார்த்திகேயன் தொடர்கிறார். தொடர்ந்து பாடும் வைக்கம் விஜயலட்சுமியின் குரலில் அழகாகச் சம்மனமிட்டு அமர்ந்து கொள்கின்றன வரிகள். மென் தாள இசைக்கு, ஒரு தாலாட்டுப் போல ஒலிக்கிறது குழுவினரின் குரலிசை. அத்தனையைம் கச்சிதமாகக் கோர்த்து ஒரு இசைக் கதம்பமாகத் தந்திருக்கிறார் இசையமைப்பாளர் திப்பு நினான் தோமஸ் ( Dhibu Ninan Thomas).

பாடலின் இறுதிச் சரணத்தில், " சேட்டைக்கெல்லாம் சொந்தக்காரி.." ன்னு விஜயலட்சுமி அழுத்தம் வைக்கையில் பாட்டு முடிந்து போகிறது. ஆராதனாவைப் போலவே நாமும் " ஆஆஆஙா " என்றுணர்கின்றோம். சந்தேகமேயில்லை; இந்த ஆண்டின் கலக்கல் பாடல் வரிசையில், " வாயாடி பெத்த புள்ள.."யும் வந்து சேரும்...