யூடியூப் கோர்னர்

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்தியராஜ் நடிப்பில் உருவாகி வரும் கனா திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய மகளீர் அணியில் இடம்பெறத்துடிக்கும் கிரிக்கெட் வீராங்கணை பற்றிய திரைக்கதை இது.

«இந்த உலகம், நீ ஜெயிச்சுருவன்னு சொன்னா கேட்காது, ஆனா ஜெயிச்சுட்டு சொன்னா கேட்கும்» எனும் சிவகார்த்திகேயனின் பஞ்ச் வசனங்களுடன் முடிவடையும் முன்னோட்டம் யூடியூப்பில் சூடு பிடித்துள்ளது.

நேற்றுடன் முடிவுக்கு வந்த ஐசிசி சர்வதேச டி20 மகளீர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தை வீழ்த்தி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை தனதாக்கிக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

இத்தொடரில் இந்திய அணி அரையிறுதி வரை வந்து இங்கிலாந்திடம் தோற்றிருந்தது.