யூடியூப் கோர்னர்

The Accidental Prime Minister எனும் புதிய திரைப்படம் ஹிந்தி மொழியில் எதிர்வரும் ஜனவரி 11ம் திகதி வெளியாகவுள்ளது. அதன் டிரெய்லர் தற்போது யூடியூப்பில் பிரபலமாகிவருகிறது.

இதே பெயரில் Sanjaya Baru எழுதி மிகப்பெரும் பிரபலமடைந்த நாவலை மையமாக வைத்து திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பதவிக் காலத்தை ஒட்டிய திரைக்கதை இது. விஜய் ரத்னாகர் குத்தே இயக்கத்தில் அனுபம் கெர், அக்ஷய் கண்ணா, சுசன் பெர்னேர்ட் ஆகியோர் நடிப்பில் உருவாயுள்ள இத்திரைப்படத்தில் அனுபம் கெர், மன்மோகன் சிங்கின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  இயல்பிலேயே அதிகம் பேசாத மன்மோகன் சிங், அவரது பதவிக் காலத்தின் போது தனது கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியினால் எப்படி அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்தார் என்பது தொடர்பிலான காட்சிகள் டிரெய்லரில் காண்பிக்கப்படுகின்றன.

இதைவிட பெரிய முரண் நகை என்னவெனில், பாஜக தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில், குறித்த திரைப்படத்தின் டிரெய்லரை கட்டாயம் அனைவரும் பார்க்க வேண்டும். எப்படி 10 வருடங்களாக டாக்டர் மன்மோகன் சிங்கை வைத்து சோனியா குடும்பத்தினர் இந்திய நாட்டை ஆண்டுகொண்டிருந்தனர் என்பது வெளிச்சத்திற்கு வரும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.

 

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.