"அதெப்படி எட்டயபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு நெருப்பைச் சுமந்த கருப்பை ... " என ஆச்சரியப்பட்டார்கள் கவிஞர்கள். ரௌத்திரம் பழகு என உரத்துச் சொன்னவன் பாரதி.
சமூக ஒடுக்குமுறைகள் மீது அடங்காத கோபங்கொண்ட அவன், எத்துனை அன்புருவானாக இருந்திருந்தால் தனிமையில் இவ்வாறு நெக்குருகிப் போவான். பாரதியின் கண்ணம்மா பாடல்கள் எல்லாம் அன்பின் இனிமையில் தோய்தவை.
இன்று பாரதியின் பிறந்தநாள் நினைவில் அவனது " சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா.." பாடியிருக்கும் சின்மயியும், ரமணனும் பாரதியின் காதல் கண்ணம்மாவை, கனிவான தங்கள் குரலில் கண்முன் நிறுத்துகின்றார்கள் . அருமையான அந்த இசைக் கோப்பினைக் கீழே காண்க