யூடியூப் கோர்னர்
Typography

‘ஜோக்கர்’ பட இயக்குநர் ராஜுமுருகனின் மூன்றாவது படம் ‘ஜிப்ஸி’. ஜீவா நாடோடி இளைஞனாகவும் கலைஞனாகவும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நடாஷா சிங் நாயகியாக நடித்துள்ளார்.

வரும் வெள்ளியன்று வெளியாகவிருக்கும் இந்தப் படம், தணிக்கையின் கடுமையான கத்தரிக்குள் சிக்கி கண்ணாபின்னாவென்று வெட்டு வாங்கியது. வெட்டுக்களை ஏற்க மறுத்த படக்குழுவினர் தணிக்கை நடுவர் மன்றத்துக்கு விண்ணப்பித்தனர். அங்கே இன்னும் வெட்டித் தள்ளினார்கள். வேறு வழியின்று பரிதுரைத்த அத்தனை வெட்டுகளையும் ஏற்றுக்கொண்ட பின்னர் ‘ஏ’ சான்றிதழ் கிடைத்தது.

இந்நிலையில் தணிக்கையில் நீக்கப்பட்ட பல காட்சிகளை யூடியூபில் வெளியிட்டு துட்டு அள்ள படக்குழு உத்தேசித்து அதில் முதல் காட்சியை ஸ்னீக் பீக் என்ற பெயரில் 2 நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளது ஜிப்ஸி படக்குழு. அதில், நடைபாதை வாசிகள், துணை முதல்வர் பாதுகாப்பு, ஆதார் அட்டை, மாவோயிஸ்ட், நீதித்துறை, காவல்துறை குறித்த துணிச்சலான விமர்சனம் வசனம் மூலம் இடம்பெற்றுள்ளதைப் பாருங்கள்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்