யூடியூப் கோர்னர்
Typography

சுவிற்சர்லாந்தில் வாழ்ந்து வரும் புலம்பெயர்த் தமிழர்களின் இரண்டாம் தலைமுறை தமிழ்ப் பெண்கள் இணைந்து, சர்வதேச மகளீர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு வெளியிட்ட காணொளிப் பாடல் இது.

இப்பாடலை அவர்கள் அர்ப்பணிக்கும் நபர்கள் முக்கியமானவர்கள். தமது தாய்மார்கள், சகோதரிகள், உறவினர்கள், நண்பர்களுக்கு மாத்திரமல்லாது, ஓர் பாலின ஈர்ப்புடைய பெண்கள், கணவனற்று தனியாக குழந்தையை வளர்க்கும் தாய்மார்கள், பிள்ளைகள் அற்ற அல்லது பிள்ளைகள் பெற விருப்பமில்லாத பெண்கள், துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண்கள், பல்லின, நிறப் பெண்கள், தமது இலட்சியங்களுக்காக வாழ்ந்த பெண்கள், திருமணமாகாத பெண்கள், கல்வி மற்றும் பாதுகாப்பு அற்ற பெண்கள், பாலியல் உறவு வேண்டாமெனும் பெண்கள், பெண்ணிய சம உரிமைக்காக போராடும் புரட்சிப் பெண்கள் அனைவருக்கும் சமர்ப்பிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

«ஒன்றாக இணைந்து மேலெலும் போது உறுதியடைகிறோம். பிரிந்து தனியாக நிற்கும் வரை பலவீனமடைகிறோம் » எனும் எழுத்தாளர் ஜேகே ரோலிங் கின் புகழ்பெற்ற வாக்கியங்களும், தனிமரம் தோப்பாகாது எனும் தமிழ்ப் பழமொழியும் காணொளியின் இறுதியில் தோன்றுகின்றன.

அனைத்துப் பெண்களுக்குமான அழகான அர்ப்பணிப்பாக அமைந்திருக்கும் அர்மிதா மதிவண்ணன் குழுவினரின் நடனப் பாடல்

international women's day, a message xx

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்