யூடியூப் கோர்னர்
Typography

தமிழகத்தில் தூங்கா நகரம் என மதுரைக்கு ஒரு சிறப்புண்டு. அதுபோல் ஐரோப்பாவில்  24 மணிநேரமும் இயங்கிக் கொண்டிருக்கும் நாடு இத்தாலி. அப்படியான ஒரு நாட்டை அமைதி கொள்ள வைத்திருக்கிறது கொரோனா வைரஸ் தாக்கமும், அதற்கான எதிர்ப்பு நடவடிக்கைகளும்.

உண்மையில் நம்பமுடியாதவாறு அமைத காக்கிறது இத்தாலி. அவசரகாலநிலை அறிவிக்கப்பட்டதும், ஆங்காங்கே குழப்பங்கள் தலைதூக்கின. ஆனால் அனைத்தும் இரு நாட்களுக்குள் அடங்கி, மக்கள் அமைதி காக்கின்றார்கள். எந்நேரமும் மக்கள் நிரம்பி வழியும் தெருக்களெல்லாம் வெறிச்சோடி ஊர் உறங்கிக்கிடக்கிறது.

எப்போதும் கொண்டாட்ட மனநிலையுடைய இத்தாலியர்களை இவ்வாறு அமைதிகொள்ளச் செய்வது என்பது எளிதல்ல. ஆனால் அரசும், அரச தலைவர்களும், அதிகாரிகளும், சமகாலநிலையை சரியாக மக்களுக்குத் தெளிவுபடுத்தி அமைதியுறச் செய்திருக்கிறார்கள்.

எமக்கு நன்கு பரிச்சமும், பார்த்து ரசித்த பல இடங்களும் கொண்ட இத்தாலியின் ஜெனோவா நகரின் பகுதிகள் ஆளரவம் குறைந்து அமைதியாக இருப்பதான காட்சிகள் அழகாக இருந்தாலும், உயிர்த்துடிப்பு இழந்து காணப்படுவதுபோல் தோன்றுகிறது. இந்த நிலை விரைவில் மாறவேண்டும்... வீதி எங்கும் மக்கள் நிரம்பி வழியவேண்டும்...

அழகாகப் படம்பிடித்துத் தந்த 'தமிழ் அமுதம் பிக்சர்ஸ்' நண்பர்களுக்கான நன்றிகளுடன், அமைதியில் உறைந்த அழகிய ஜெனோவா.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்