யூடியூப் கோர்னர்
Typography

இத்தாலிய பிரதமர் யூசெப் கோன்டே மார்ச் 16 திங்களன்று பகலில் செய்தியாளர்களிடம் பேசுகையில், இத்தாலி ஆபத்தான வாரங்களில் நுழைவதாக எச்சரித்தார். அன்று மாலையே மேலும் 349 புதிய உயிரிழப்புக்களைச் சந்தித்திருந்தது.

அதற்கு முந்தைய நாளில் 368 உயிரிழப்புக்கள் என இரு தினங்களில் 700 பேரையும், வைரஸ் தொற்று அறியப்பட்ட இரு வாரங்களுக்குள் மொத்தமாக 2,158 காவு கொடுத்திருக்கிறது இத்தாலி. இது சீனாவிற்கு அடுத்தான பேரிழப்பு. ஆனால் இந்த மரணப்புள்ளியை சீனாவை விட வேகமாகத் தொட்டிருக்கிறது இத்தாலி.

திங்களன்று காலையில் பிரதமர் கொண்டே பேசிய விடயங்கள் இத்தாலிக்கு மட்டுமானது எனக் கடந்து செல்ல முடியாதவை, அலட்சியப்படுத்த முடியாதவை. " நாங்கள் இன்னும் இழப்புக்களின் உச்சத்தை எட்டவில்லை என்று மருத்துவர்களும், ஆய்வாளர்களும் கூறுகிறார்கள், ஆதலால் இவை ஆபத்தான வாரங்கள், எங்களுக்கு மிகுந்த முன்னெச்சரிக்கை தேவை. ஐரோப்பாவில் முதன்முதலில் வைரசின் தாக்கத்தைப் பரவலாக அனுபவித்த நாடு என்பதால், எங்கள் அனுபவங்கள் மற்றைய ஐரோப்பிய நாடுகளுக்கு குறிப்பிடத்தக்க அனுபவத்தினை வழங்க முடியும். இந்த அனுபவங்களின் வழியே சொல்கின்றேன். முடிந்தவரை வீட்டிலேயே இருங்கள்" என்கிறார்

இத்தாலியின் லொம்பார்டியாவிலுள்ள ப்ரெசியா நகரின் மருத்துவமனையிலிருந்து ஒரு மருத்துவ நிபுணர் ஐரோப்பிய நாடுகளுக்கு பின்வருமாறு எச்சரிக்கின்றார் " இத்தாலியின் தவறுகளிலிருந்து நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்." இத்தாலியர்களின் தவறு என அவர் குறிப்பிடுவது என்ன ?

அறிவதற்கு நீங்கள் 12 நிமிடங்கள் கொண்ட இந்த வீடியோவை முழுமையாகப் பார்க்கவேண்டும்.

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்