யூடியூப் கோர்னர்

அலுவலகம் விட்டு வந்தால் வீடு, வீடு விட்டு வந்தால் அலுவலகம் எனும் காலம் போய் இப்போது வீடு மட்டும்தான் என்கிற நிலைக்கு வந்துவிட்டோம்.

இது தற்காலிக நிலைதான் என்றாலும் வீட்டில் இருந்து பணிபுரிவோர் மற்றும் கல்வி பயில்வோர் செய்யும் வேலையைக் கவனச்சிதறல் இல்லாமல் செய்வதற்கு இந்த "Lofi இசை". (மெய்ப்பற்றும் இசை) இவர்களுக்கு உதவி வருகிறது.

மெய்ப்பற்றும் இசை என்பது வரிகள் அற்று குரல் அற்று வெறும் இசைக்கருவிகள் மட்டும் ஒலிக்கும் இசை. உலகளாவிய ரீதியில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பாடத்தினை முழுக்கவனத்துடன் படிப்பதற்காக இந்த லோ ஃபை இசையை பயன்படுத்திகிறார்கள்.

LO-FI என்ற சுருக்கெழுத்து, அதனை உருவாக்கியவர் எரிக் மேத்யூஸின் (Eric Mathews) என்பவரின் கூற்றுப்படி, “குறைந்த மெய்ப்பற்று” (low fidelity) என்பதைக் குறிக்கிறது. இது ஒரு வகை தவறுதல் ஒலிப்பதிவு ஆகும். தொழில்நுட்ப ரீதியாக ஒலிப்பதிவு செய்யப்படும்போது பின்னனி இயற்கை ஒலிகளுடன் பதிவுசெய்யப்படுகிறது, அதாவது நேரடி ஒலிப்பதிவுகளுடன் மாறுபாட்டு ஹம்மிங், பின்ணனி இரைச்சல், இசை விலகல் போன்ற பதிவுகளுடன் வருகிறது. இவ்வகையான இசை எமது பெருமூளைச் செயற்பாட்டை தூண்டி செய்யும் வேலையில், படிப்பில் கவனத்தை செலுத்த உதவுகிறது.

மூளையின் முன்பக்க மடல் பெரும்பாலான மூளை செயல்பாட்டின் மையமாகும், அதுவே நாம் மனிதராக மேம்படுத்த உதவுகிறதாம், இந்த லோ ஃபை இசையைக் கேட்பதன் மூலம் உங்கள் மூளைக்கு நீங்கள் கவனம் செலுத்த உதவுகிறீர்கள். இதுவே மூளை ஒலியின் வேறுபாடுகளைத் தெரிவுசெய்கிறது, மேலும் இது கவனம் செலுத்தும் ஆறுதல் மனநிலையைப் பெற உதவுகிறது.

மாணவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களுக்கும் தங்களது பணி இடங்களில் இந்த இசை பெரும் உதவிசெய்வதாக தெரிவித்திருக்கின்றனர். அதேநேரம் இவ்விசையினால் தங்களது உற்பத்திறனும் படிக்கும் பழக்கமும் அதிகரித்திருப்பதாக 86% வீதமானர் தெரிவித்திருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றும் கூறுகிறது.

சாதாரணமாக பாடல்களை கேட்டுக்கொண்டு வேலை செய்வதை விட இந்த பாடல்வரிகள் அற்ற லோஃபை இசைகள்தான் இப்போது இருக்கும் கொரோனா சூழலில் பிரபல்யமாக கேட்கப்படுகிறது. படைப்பாற்றல் திறன் உள்ள எவரும் விரும்பும் இசையாகவும் மாறிவருகிறது.

இதற்கு என்றே தனியாக ஆல்பம் வெளியிடும் மேற்கத்திய இசைக்கலைஞர்கள் பலரும் உள்ளனர். யூடியூப் நேரடி வீடியோ இசையாகவும் அண்மைய நாட்களில் பலருக்கும் கைகொடுத்து வருகிறது.

இதோ லோஃபை இசைகளுக்கான சில இணைப்புக்கள் :

www.lofimusic.com
www.soundcloud.com/lo-fi-music
www.freemusicarchive.org/genre/Lo-fi/

 

 

நன்றி தகவலுதவி : www.hyde.edu/

கொரோனா ஊரடங்கு காலத்தை பயனுள்ள வகையில் பாடல்கள் உருவாக்குவதில் செலவழித்து வருகிறார் ஸ்ருதிஹாசன்.

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்து தற்போது பிரபலமான நகைச்சுவை நடிகராக இருந்து வருபவர் ரோபோ சங்கர்.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.