யூடியூப் கோர்னர்

கோரானா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை மக்கள் தங்களைத் தற்காத்துக்கொள்ள உலகம் முழுவதும் வாழும் சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள் என ஒவ்வொருவரும் அவரவர் பாணியில் கரோனா குறித்த விழிப்புணர்வைப் பரப்புவதற்கு முயன்றுவருகின்றனர்.

இவற்றுக்கிடையே மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எழுதி, மெட்டமைத்து இந்திரனீல் சென் பாடியிருக்கும் ‘ஸ்தப்த கரோ ஜப்த கரோ’ எனும் பாடல் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

“கரோனாவை நினைத்துப் பயப்பட வேண்டாம். கூட்டத்திலிருந்து விலகி இரு. தொற்றும் கிருமி தொட முடியாத தொலைவில் இரு. நாம் வாழ்வதற்குப் பிறந்தவர்கள். நாம் தோல்வியை விரும்பாதவர்கள். நாம் மனத்தளவில் ஒன்றானால், கரோனாவால் நம்மை எதிர்க்க முடியுமா? அரசு உத்தரவுகளைக் கடைப்பிடியுங்கள். வதந்திகளை நம்பாதீர்கள்.

கரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெல்வோம்...” என்னும் மம்தாவின் வரிகள், மேற்கு வங்க மக்களுக்கு மட்டுமல்லாமல் எல்லோருக்கும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளன. இந்தப் பாடலால் ஈர்க்கப்பட்ட புகழ்பெற்ற ஹார்மோனிகா இசைக் கலைஞர் டாக்டர் பபிதா பாசு இந்தப் பாடலை மவுத்-ஆர்கனில் வாசித்து, நெருங்கிய நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, “என்னால் முடிந்த சேவை இது” என்று சொல்லியிருக்கிறார்.

மம்தா பானர்ஜி எழுதிய பாடலின் காணொளியைக் கீழே பாருங்கள்:

நடிகர், நடிகைகளுக்கு யோகா ஆசிரியை ஆக இருந்த அனுஷ்காவை ஒரு நட்சத்திரமாக தென்னிந்திய சினிமாவில் உருவாக்கிய படம் கடந்த 2009-ம் ஆண்டு

சுவிற்சர்லாந்தில் நடைபெற்று வரும் 73 வது லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவின் Open Door எனப்படும் பகுதி இம்முறை தென் கிழக்காசிய நாடுகளின் திரைப்படங்களுக்கு ஐரோப்பிய நுழைவாயிலாக தன் கதவுகளை திறந்திருந்தன.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

" இயற்கை மற்றும் விலங்குகளின் மீதான மனித நேசிப்பினையும், மனிதர்களுடனான நல்லிணக்கத்தை விலங்ககளிடமும், தோற்றுவிப்பதன் அடையாளமாக இந்தியக் கோவில் யானைகளை நான் பார்க்கிறேன். தயவு செய்து அந்த மரபை அழித்துவிடாதீர்கள் ! " என்றார் இயக்குனர் அன்னா போல்மார்க் (Anna Bohlmark ).

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

பாகுபலி படத்தில் பல்லாலத்தேவனாக நடித்து புகழ் பெற்ற நடிகர் ராணா டகுபதி.

வில்லியம் சாட்னர் எனும் ஆங்கில திரைப்பட இயக்குனர் யானைகளை அடிப்படையாக கொண்டு 'வனத்திற்குள் திரும்பு' என்ற திரைப்படத்தை எடுத்தார்.