யூடியூப் கோர்னர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராகப் போராடும் மருத்துவர்கள் தாதியர்களுக்கு மரியாதை செய்வதற்குக் கைதட்டுவார்கள். ஆனால் வைத்தியம் பார்க்கும் மருத்துவர்கள் அதே தொற்றினால் இறந்துவிட்டால் அவர்களுக்கான இறுதி மரியாதை என்ன?

தமிழகத்தில் கொரோனோச் சிகிச்சையின் போது தொற்று ஏற்பட்டு மரணித்த மருத்துவர் சைமன் சடலத்தை தகனம் செய்யப்போன போது நடந்தது என்ன ? மனித குலத்திற்கே இழுக்கான அச்சம்பவம் குறித்து உடன் சென்ற மருத்துவர் பாக்கியராஜ் கண்ணீரோடு சொல்கின்றார்....

சில தினங்களுக்கு முன், சென்னையின் பின்தங்கிய பகுதியான அம்பத்தூரில் வசிக்கும் சாமானிய மக்கள், சென்னையில் பணிபுரிந்த மருத்துவரான ஆந்திராவின் நெல்லூரைச் சேர்ந்த லக்ஷ்மி நாராயணன் என்பவர் கொரோனாவல் இறந்தபோது அவரது உடலை தங்கள் பகுதி மின் மயாணத்தில் எரிக்க கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மருத்துவர் உடலை மயானத்துக்குள் அனுமதிக்க மறுத்த மக்கள் ! - அம்பத்தூரில் நடந்தது என்ன ?

தற்போது இரண்டாவது சம்பவமும் வடசென்னை பகுதியிலேயே நடந்துள்ளது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் இயக்குநராகவும் நரம்பியல் நிபுணராகவும் டாக்டர் சைமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மூன்றாவது வாரத்திலிருந்தே வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய பல சென்னை பணக்காரர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டு, அவர்களுக்கு தனது குழுவுடன் தான் பணியாற்றி வந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்துள்ளார். பின்னர் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இவருக்கும் கொரொனா தொற்று கண்டறியப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று அவர் உயிரிழந்துவிட, அவர் நீண்டகாலமாக வசித்துவந்த கீழ்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய மாநகராட்சியிடம் குடும்பத்தினர் அனுமதி வாங்கி உள்ளனர். கொரோனா தொற்றுள்ள உடல் என்பதால் அவரது மனைவி, மகன் மற்றும் நண்பர்கள் வெகு சிலர் மட்டுமே உடலை எடுத்து சென்றுள்ளனர். ஆனால் தகவல் தெரிந்து கல்லறைக்கு உடல் வரும் முன்பே அங்கு அப்பகுதி மக்கள் கூட்டமாக நின்று எதிர்ப்பு தெரித்தனர்.

இதனால், கீழ்ப்பாக்கம் கல்லறையில் அடக்கம் செய்ய முடியாமல் அங்கிருந்து வடசென்னையின் மற்றொரு பிந்தங்கிய பகுதியான வேலப்பாங்காடு மின் இடுகாட்டிற்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். அங்கும் இடுகாட்டில் வேலை செய்தவர்கள் அப்பகுதி மக்களிடம் தகவலை பரப்பிவிட நிலைமை கைமீறிப்போனது. 500-க்கும் அதிமான அப்பகுதி மக்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் பெருங்கூட்டமாகக் கூடி உடலை உள்ளே அனுமதிக்காமல் இடுகாட்டின் வாசலில் அமர்ந்து தர்ணா செய்ததால் பிரச்சனை ஏற்பட்டது.

அதையும் மீறி உடலைக் கொண்டுவந்த ஆம்புலன்ஸ் உள்ளே நுழைய முயற்சிக்க.. கற்கள், கம்பு ஆகியவற்றுடன் வந்து ஆம்புலன்ஸை உடைத்த மக்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநரையும், மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்களையும் தாக்க, இறந்தவரின் உறவினர்கள் உட்பட பலரும் காயம்பட உயிர்பிழைத்தால் போதுமென்று உடலுடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்து அங்கே காயம்பட்டவர்களை சேர்த்துவிட்டு, அதிரடிப் படை போலீஸார் ஐந்து பேர் பாதுகாப்புடன் மூன்று மணிநேர இடைவெளிக்குப்பின் மீண்டும் அங்கே மக்கள் கூட்டம் இல்லை என்பதைத் தெரிந்துகொண்டு வேலப்பாங்காடு மயானத்துக்கு மாநகராட்சி ஊழியர்கள் உடலைக் கொண்டு சென்றுள்ளனர். இருட்டிவிட்ட பிறகு இறந்த மருத்துவரின் உடலை அவசர அவசரமாக புதைத்துவிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள்.

இந்நிலையில் அரசின் சுகாதாரப் பணி செய்யவிடாமல் மாநகராட்சி ஊழியர்களை தாக்கியதாக வேலப்பாங்காடு பகுதியைச் சேர்ந்த 20 பேர் மீது சென்னை காந்திநகர் போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்தச் செய்தி மீடியாக்களில் வெளிவருவதும் முடக்கபட்டிருந்த நிலையில் இன்று அது வெளியிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறது.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

நடிகையர் திலகம் சாவித்திரி வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘மகாநடிகை’யை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமானர் 35 வயது இயக்குநர் நாக் அஷ்வின்.

"பியாற்சா கிரான்டே" எனும் பெருமுற்ற திறந்தவெளித் திரையரங்குச் சிறப்பு மிக்க லோகார்னோ சர்வதேச திரைப்படவிழாவின் 73 வது பதிப்பு, கொரேனா வைரஸ் பெருந்தொற்று பாதுகாப்புக்களுக்கு அமைவாக, இணையவெளியில் ஆரம்பமாகியது.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

தமிழகத்தைச் சேர்ந்த பெருமைமிகு இளம் திறமைசாலிகள் பலரும் சர்வதேச அளவிலான கலை மற்றும் இசைத் தளங்களில் தடம் பதித்து மிகச் சிறப்பானதொரு இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

வொயேஜர் 1 (Voyager 1) என்பது ஐக்கிய அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் 1977 செப்டம்பர் 5 இல் சூரியக் குடும்பத்தின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக ஏவப்பட்ட ஓர் ஆளில்லா விண்ணுளவி ஆகும்.

ஒரு காலத்தில் அருண் பாண்டியன் கோலிவுட்டின் ஆர்நால்ட் எனப் போற்றப்பட்டவர். அந்த அளவுக்கு 12 பேக் உடம்பை உருவாக்கி பல அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்தவர்.

சந்தானம்  நடிக்கும் பிஸ்கோத் படத்தின் ட்ரைலர் வெளியானது