நடிகரும், மக்கள் மையத் தலைவருமான கமல்ஹாசன், கொரோனா கால தனிமைப்படுத்தலை மையமாக வைத்து எழுதி வெளியிட்டிருக்கும் புதிய பாடல் இன்று வெளியாகியுள்ளது. இசையமைப்பாளர் ஜிப்ரானின் இசையமைப்பில் வெளிவந்துள்ள இப் பாடலில்,
பிரபல இசையமைப்பாளர்கள், அனிருத், யுவன் சங்கர்ராஜா, ஶ்ரீதேவி பிரசாத், ஆகியோரும், பாம்பே ஜெயஶ்ரீ, சிட் ஶ்ரீராம், சங்கர்மகாதேவன் முதலிய முக்கிய பாடகர்கள், பாடகர்களுட், நடிகைகளுமான, சுருதிஹாசன், ஆன்ட்ரியா ஆகியோருடன் கமல்ஹாசனும் பாடியுள்ளார்.
இந்தப் பாடல் உருவானதும், வெளியீடும், அதன் பத்திரிகையாளர் மாநாடும் கூட, முதல் முறையாக இணையத்தின் வழியாக நடைபெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்