யூடியூப் கோர்னர்

சம்பூர் எனும் அழகிய ஆற்றங்கரைக் கிராமம் மக்கள் போராட்டங்களால் அழிவிலிருந்து மீட்கப்பட்டிருக்கிறது. சம்பூர் அனல் மின்நிலையச் செயற் திட்டத்தினை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது எனும் முடிவு நேற்றைய தினம் அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இம் மின்நிலையம் தொடர்பில் தொடர்ச்சியாக அப்பகுதி மக்கள் வெளிப்படுத்திய எதிர்நிலைப் போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாக இதனைக் கண்டு மகிழ்வுகொள்கின்றார்கள்.
இந்நிலையில் இம் மின்னிலையம் தொடர்பாக இவ்வாண்டு வெளிவந்த ஆவணப்படம் மின்பொறிக்குள் சம்பூர்.

இந்திய - இலங்கை அரசுகளின் கூட்டு ஒப்பந்தத்தில் அமைக்கப்படவிருந்த அனல் மின்நிலையம் குறித்தும், அதனால் ஏற்படவிருந்த பாதிப்புக்கள் குறித்தும் பேசும் இப் படத்தினை இங்கே காணலாம்.