யூடியூப் கோர்னர்

ஆண் பெண் அனைவரும் சமம் என்கிறோம். ஆனால் கார்ட்ஸ் விளையாட்டில் ஏன் ராஜாவை விட ராணி பெறுமதி குறைவானவளாக இருக்கிறாள் எனக் கேட்டு, நூற்றாண்டு காலமாக கார்ட்ஸ் விளையாட்டில் இருந்த இந்த ஆணாதிக்கத்தை புரட்டிப் போட்டிருக்கிறாள் பதின்ம வயது இஸ்ரேலிய பெண் மாயான்.

இது தவறு, இதற்கு மாற்று வேண்டும் என யோசித்து அவளே தயாரித்த புதிய கார்ட்ஸ் வடிவமைப்புக்கு, இதுவரை அவள் திரட்டிய மொத்த தொகை 420'000 டாலர். இன்னமும் திரட்டிக் கொண்டிருக்கிறாள். அவளது ஒரே நோக்கம், ஆண் பெண் பாலினங்கள் இடையே சமநிலையை கார்ட் வடிவமைப்பிலும் கொண்டுவரவேண்டும் என்பதே. கனவு காண்பதுடன் நிறுத்திக் கொள்ளாது தான் வடிவமைத்த கார்ட்டுக்களை ஆன்லைன் ஊடாக விற்கவும் தொடங்கிவிட்டாள். படுபிரலமாகிறது அவளது புதிய கார்ட் வடிவமைப்புக்கள்.

அவளுடைய கார்ட்டுக்களுக்கு அவள் வைத்திருக்கும் பெயர் Queeng Playing Cards. King, Queens மற்றும் Jacks கார்ட்டுக்களுக்கு பதிலாக அவள் வடிவமைத்திருக்கும் கார்ட்டுக்களில் ஆண் பெண் அனைத்து வடிவங்களும் கலந்து இருக்கின்றன. Joker கூட பெண் வடிவமைப்பில் இருக்கிறது.

தெருக்களில் அலையும் தேசத்தின் புதல்வர்கள் - தமிழகத்தின் தலைப்புச் செய்தி !

சில வருடங்களுக்கு முன் அவள் தன் தந்தையுடன் விடுமுறைக்கு சென்ற இடத்தில் கார்ட்ஸ் விளையாடிய போது, ஏன் ராஜாவை விட ராணியை ஒரு படி குறைவாகவே கணக்கிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பியிருக்கிறாள். தந்தையிடம் பதில் இல்லை. நீ கேட்பது நியாயமானது தான். நீயே தீர்வை கண்டுபிடி என அவளை அவள் தந்தை ஊக்குவித்திருக்கிறார். எப்படி அவளது யோசனையை நடைமுறைக்கு கொண்டுவரலாம். எப்படி, அவள் உருவாக்குபவற்றை மக்கள் பாவணைக்கு கொண்டுவரலாம் என அனைத்தையும் தந்தை சொல்லிக் கொடுக்க, ஒரு iPad ஐ வாங்கி தானே கார்ட்டுக்களை வடிவமைத்து பிரிண்ட் செய்யத் தொடங்கிவிட்டாள் மாயான்.

பிரபாகரன் சந்தித்திருந்த தமிழ் நிலத்தின் கடைசி மன்னர் சிங்கம்பட்டி ஜமீன் மறைந்தார் !

ஆண் பெண் சமத்துவத்தை பிரதிபலிக்கு முதல் கார்ட் தொகுப்பினை அவளே இப்போது உலகத்தில் உருவாக்கியுள்ளாள். அவள் உருவாக்கியுள்ள கார்ட்டுக்களில், ராஜா, ராணிக்கான புள்ளி மதிப்பீடு அனைத்தும் சமம். முடிந்தால் இவற்றை வாங்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு பாலினச் சமத்துவத்தை சிறுவயதிலிருந்தே நீங்கள் விளையாடும் ஒவ்வொரு விளையாட்டின் ஊடாகவும் சொல்லிக் கொடுங்கள் என்கிறாள் மாயான்.

பல்வேறு நிற, இனத்தவர்களை பிரதிபலித்து கார்ட்டுக்களை உருவாக்குவது அவளுடைய அடுத்த திட்டம். கார்ட்ஸ் விளையாடாதே, அது சூதாட்டம் எனச் சொல்லும் நபர்கள் மத்தியில், கார்ட்ஸ் விளையாட்டு அனைவருக்கும் ஏற்றது தான், அதில் உள்ள ஆணாதிக்க மனநிலையில் தான் சூது இருக்கிறது என மாயா சொல்லும் போது ஆமோதிக்கத் தோன்றுகிறது.

காணொளி

அவளுடைய crowdfunding திட்டம் :

https://www.indiegogo.com/projects/queeng-playing-cards?gclid=Cj0KCQjwwr32BRD4ARIsAAJNf_0sBvp7Y_RPLHk-jiP-jNWDxx9pPlHE2mMdwIJAIiiEMzyjvs7O53gaAjd7EALw_wcB#/

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா அலை முடிந்தபிறகுதான் அஜித் வலிமை படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என்று அஜித் தரப்பில் முதல் கூறப்பட்டது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ரஜினியின் அறிக்கையை ஊன்றிப் படித்தால் ஒரு விசயம் தெளிவாகிறது - அவர் அரசியலில் இருந்து விலகுவதாக சொல்லவில்லை, கட்சியை நிச்சயம் துவங்குவேன், ஆனால் இந்த தேர்தலுக்குள் அது நடக்காது என்கிறார்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்