யூடியூப் கோர்னர்

யூடியூப்பில் உலக பிரபலமாகி இருப்பது ராணி தாஜ் என்பவரின் பங்கார டோலக்கு வாசிக்கும் வீடியோதான்.

இவர் 2010ஆம் ஆண்டு ஆங்கிலப்பாடகி ரிகானாவின் பாடல் ஒன்றிற்கு ரீமீக்ஸ் செய்யும் விதமாக சாலையோரத்தில் நின்று டோலக்கு வாசித்துள்ளார். அந்த ஒரு வீடியோ மூலம் சர்வதேச அளவில் பிரபலமானர்.

பாகிஸ்தான் (காஷ்மீர்) வம்சாவளியை சேர்ந்த ராணி தாஜ் தனது 9 வயதில் வயலின் வாசிக்க ஆரம்பித்தார். பள்ளிகூடபடிப்பின் இறுதியில் பணி நிமித்தம் சீக்கியர்கள் கொண்டாடும் அறுவடை திருவிழாவான வைசாக் மேலா விழாவில் பங்கேற்றார். அங்குதான் குழு டோலாக் இசையினை கண்டு டோலாக் இசைகருவி மீது தீராத ஆர்வம் கொண்டாராம். அப்போதே தயாரிடம் வாங்கித்தருமாறும் தான் பயிலப்போவதாகவும் கேட்டுள்ளார்.

பின்னர் முறையான பயிற்சி பெற்று பல குழுக்களுடன் இணைந்து பொது விழாக்களிலும் பணியாற்றி அங்கும் பல அனுபவப்பயிற்சிகள் பெற்று முன்னேறினார். பங்கார எனப்படும் நடன அசைவுகளையும் கூடவே கற்றுக்கொண்டாராம், இதற்காகவே அனைவரிடமும் தனிக்கவனம் பெற்றுவந்தார். மற்றவர்களை போல சாதாரண பெண் டோலக்கு கலைஞராக இருக்க அவர் ஆசைப்பட்டாலும் யூடியூப்பில் வெளியான அவரது ஆங்கிலப்பாடலுக்குகேற்ப டோலக்கு வாசிக்கும் வீடியோ மூலம் வெளி உலகுக்கு அறிமுகமானார். இந்த வீடியோ மட்டுமல்ல ராணி தாஜ் பிரபலமானதற்கான மற்றுமொரு காரணம் ஆண் கலைஞர்களால் ஆண்களை முன்னிலைப்படுத்தி மட்டுமே வாசிக்கப்பட்டு வந்த கலாச்சார இசைக்கருவியான டோலக்கு தனி ஒரு பெண்ணாக அதுவும் எந்தவொரு சிரமமுமின்றி ஆண்களுக்கு நிகராக வாசித்துவருவதுதான்.

உலகமெங்கிலும் இளைஞர் யுவதிகளுக்கு முன்மாதிரியாகவும் ராணி தாஜ் இருந்து வருகிறார். இவரது டோலக்கு இசை மீதான ஆர்வத்தோடு பல தன்னார்வ தொண்டுகளிலும் ஈடுபட்டு வருகிறார். தொடர்ச்சியாக டோலக்கு இசைத்ததின் மூலம் கிடைக்கப்பெற்ற தொகையை பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ள அனர்த்த நிவாரண மையங்களுக்கு அளித்துள்ளார். மேலும் பூகம்பம் சுனாமி போன்ற தொண்டு நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறார்.

அவரது யூடியூப் வீடியோ வைரலாகிவிட்ட பிறகு, திருமணங்கள், தொண்டு நிகழ்வுகள் மற்றும் இரவு விடுதிகள் உட்பட உலகம் முழுவதும் பல இடங்களின் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டார். நியூயார்க்கில் நேரடி ஸ்டுடியோ அமர்விலும் இசை நிகழ்த்தினார். பிபிசி ஆசியன் நெட்வொர் நடத்திய நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்றார்.

இங்கிலாந்தில் நடத்தப்பட்ட மிகப்பெரிய டோலக்கு போட்டி ஒன்றுக்கு போட்டியின் நடுவர்களில் ஒருவராக அழைக்கப்பட்டார். இறுதிப் போட்டியில் அவர் மட்டுமே பெண் நடுவராக மட்டுமல்ல, அன்றைய மூத்த குழுவில் இளைய நடுவராகவும் இருந்தார்.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

தென்னிந்திய மொழிகள், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியானால் அதை ‘பான் இந்தியா பிலிம் என்று அழைக்கிறார்கள். 'கே.ஜி.எஃப்' அப்படியொரு படம்தான்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி தொற்று குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க உலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 1 அன்று உலக சுகாதார நிறுவனத்தால் அனுசரிக்கப்படுகிறது.

சூரரைப் போற்று இயக்குநர் சுதாகொங்குரா, கௌதம்மேனன்,வெற்றிமாறன் இணைந்து இயக்கியுள்ள தமிழ் ஆந்தாலஜி படம் “பாவகதைகள்”.