யூடியூப் கோர்னர்

ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட பாகங்களில் புதிதாக; இறப்பதற்கு நேரம் இல்லை (“No Time to Die”) எனும் திரைப்படம் வெளியாக உள்ளது.

கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட தயாராகி வந்த இந்த திரைப்படம் கொரோனா அச்சுறுத்தலால் நவம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்களால் நீண்டகாலமாக பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இத்திரைப்படத்தின் முன்னோட்ட காணொளி வெளியாகியுள்ளது.

காசினோ ராயல், ஸ்கைபால் என தொடர் திரைப்பட பாகங்களில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் அதிரடியாக நடித்துவந்த டேனியல் கிரெய்கின் இறுதித் திரைப்படம் இதுவென கூறப்படுகிறது. பணி ஓய்விக்குப் பின் ஜமைக்காவில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்துவரும் ஜேம்ஸ் பாண்ட், சிஐஏவைச் சேர்ந்த அவரது பழைய நண்பர் பெலிக்ஸ் உதவி ஒன்றை கேட்கிறார். அங்கே தொலைய ஆரம்பிக்கிறது ஜேம்ஸ் பாண்டின் அமைதி. கடத்தப்பட்ட ஒரு விஞ்ஞானியை மீட்பதற்கான நோக்கம் எதிர்பார்த்ததை விட மிகவும் துரோகமாக மாறுகிறது. இது ஆபத்தான புதிய தொழில்நுட்பத்துடன் ஆயுதம் ஏந்திய ஒரு மர்மமான வில்லனின் பாதையில் பாண்டை வழிநடத்துகிறது என்பதே படத்தின் கதை என சுருக்கமாக சொல்கிறார்கள்.

ஆக எப்போதும் போல திரைப்படத்தில் அதிரடியான பல ஆக்‌ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது இந்த திரைப்பட கண்ணோட்டத்தில் தெரிகிறது.

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.