யூடியூப் கோர்னர்

நடனம் அதைச் செய்கிறவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும் அற்புத கலை.

"மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கானா" எனும் தொண்டு நிறுவன தயாரிப்பில் உருவான நடன கணொளிகளே இவை. இது அக்குழந்தைகளின் கல்வி மற்றும் சமூக நல்வாழ்விலை மேம்படுத்தி அவர்களின் திறமைகளின் மூலம் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு உகாண்டாவைச் சேர்ந்த இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய குழந்தைகளை கொண்டது. அவர்கள் அனைவரும் நம்பமுடியாத நடனக் கலைஞர்கள். ஆப்பிரிக்க இசைக்கு அமைக்கப்பட்ட அழகான நடன அமைப்புக்கு அவர்கள் பிரமிக்க வைக்கும் அசைவுகளைக் காட்டுகிறார்கள்.

உகண்டா நாட்டில் Kayirikiti எனும் கிராமங்களில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழும் மக்களின் உடை, உணவு, கலாச்சாரங்களின் பிரதிபலிப்போடு ஆப்பிரிக்க இசையுடாக இக்குழந்தைகள் நடனத்தை வெளிப்படுத்தும் உத்வேக ஆற்றல் பார்ப்பவர்களுக்கு கடத்தப்படுவது அற்புதமானது. ஆனால் மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கானாவின் பின்னால் உள்ள கதையை நீங்கள் கேட்டறிந்தால் நடனக் கலைஞர்களின் இந்த அதிசய ஆற்றலும் அவர்கள் உணரும் மகிழ்ச்சியும் மிகக் கடுமையானது என்கிறார்கள்.

போர், தீவிர வறுமை மற்றும் நோய் உள்ளிட்ட பேரழிவுச் சூழ்நிலைகளில் தங்கள் பெற்றோரை ஒன்று அல்லது இரண்டையும் இழந்த குழந்தைகளுக்கு இந்த அமைப்பு நிதியுதவி செய்கிறது. "தங்கள் இளம் வாழ்க்கையை அழித்த சோகம் இருந்தபோதிலும், குழந்தைகள் நம்பிக்கையுடன் இசை ரீதியாக அற்புதமான பொழுதுபோக்குகளுடனும் இருக்கிறார்கள்" என்று மசாகா கிட்ஸ் ஆப்பிரிக்கானா விளக்குகிறார்.

இணையத்தளம் : https://www.masakakidsafricana.com/

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

இவற்றையும் பார்வையிடுங்கள்

இந்திப் படமான ‘ராஞ்சனா’ மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அந்தப் படம் தோல்வி அடைந்தது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒரே படத்தின் மூலம் இரண்டு முக்கியப் பிரச்சினைகளை உயிரோட்டம் குறையாமல் கையாள முடியுமா ? இரண்டையும் சரியான புள்ளியில் இணைந்து விறுவிறுப்பு குன்றாமல் ஊக்கமுடன் கதைக் களத்துக்குள் நம்மை அழைத்துச் செல்ல முடியுமா? முடியும் என்று காட்டியிருக்கிறார் அறிமுக இயக்குநர் விருமாண்டி.

இந்திய சினிமாவுக்கு உலக அரங்கில் பெரிய மரியாதையைப் பெற்றுகொடுத்தவர் வங்கமொழித் திரைப்பட இயக்குநரும் ஓவிய மேதையுமான சத்யஜித் ராய்.

குதிரைக்கும் தமிழருக்குமான காலத் தொன்மை தொடர்பு 5 00 000 – 2 00 000 ஆண்டு என்பதற்கு சான்று பகர்வது தொல்லியல் ஆய்வு ஆகும் .

ஹாலிவுட்டையும் காமிக்ஸ் கதைப் புத்தகங்களையும் பிரிக்கவே முடியாது. உலக சினிமா சந்தையில் பல்லாயிரம் மில்லியன் டாலர்களை அள்ளிய ஃபேண்டசி படங்கள் அனைத்துமே முதலில் காமிக்ஸ் வடிவில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றவைதான்.

மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் டிரைலர்