டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.
தற்போது மீண்டும் இந்த இருவரும் இணைந்து ஹாலிவூட் திரைப்படம் ஒன்றின் மூலம் புது அவதாரம் எடுத்து வந்திருக்கிறார்கள்.
வில்லியம் ஹன்னா மற்றும் ஜோசப் பார்பெரா ஆகியோரால் உருவாக்கப்பட்ட அதே பெயரில் டாம் அண்ட் ஜெர்ரி கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்டு நேரடி-அதிரடி / அனிமேஷன் நகைச்சுவை படமாக வரவிருக்கிறது.
அடுத்தாண்டு மார்ச் மாதம் வரவுள்ள இப்படத்தை டிம் ஸ்டோரி இயக்கியுள்ளார், கெவின் கோஸ்டெல்லோ திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடதக்கது. அண்மையில் அத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் முன்னோட்ட காட்சிகளே அட்டகாசமாக அமைந்திருக்கிறது.
இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்