யூடியூப் கோர்னர்

ஐபில் கிரிக்கெட் போட்டி போன்று இலங்கையிலும் அண்மையில் லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. கடந்த மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 16ஆம் திகதியான நேற்று முடிவடைந்தது.

இலங்கையில் முக்கிய மாவட்டங்களின் பெயர்களை கொண்டு களமிறங்கிய அணிகளில் இறுதிப்போட்டியில் வடமாகாணம்; யாழ்ப்பாண அணியாகிய Jaffna stallions அணியும் காலி மாவட்டத்தை சேர்ந்த Galle Gladiators அணியும் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியின் படி முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna stallions அணி 20 ஓவர்கள் என நிர்ணயிக்கப்பட்டதில் 6 விக்கெட்டுக்களை இழந்து 188 ஒட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய Galle Gladiators அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்தது. 189 என்ற வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்த அணி 135 ஒட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.

இதனால் இலங்கையில் முதலாவது லங்கா பீரிமியர் தொடர் போட்டியில் முதல் சாம்பியன் பட்டத்தை Jaffna stallions அணி பெற்று சாதித்துள்ளது குறிப்பிடதக்கது.

கொரோனா பரவல் காலத்தின் விடுமுறை நாட்களை எல்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாது அனைவரது கவனத்தையும் திசை மாற்றியிருந்தது, அத்தோடு யாழ்ப்பாண அணி வெற்றி வாகை சூடியதும் மேலும் உற்சாகப்படுத்தியிருந்தது எனலாம்.

இதேவேளை ஒவ்வொரு அணியும் தங்களுக்கான தீம் பாடல்களை உருவாக்கியிருந்தனர். எனினும் ''Jaffna Boys'' எனும் யாழ்ப்பாண அணிக்காக உருவாக்கப்பட்ட பாடல் தற்போது பிரபல்யமாகிவருகிறது.

 

 

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

இவற்றையும் பார்வையிடுங்கள்

'சில்லுக்கருப்பட்டி’ திரைப்படத்தின் மூலம் பலரது கவனத்தையும் பெற்ற இயக்குனர் ஹலிதா ஷமீம் அவர்கள் அடுத்து இயக்கியிருக்கும் திரைப்படம் " ஏலே" பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டி என்கிற கிராமத்தில் வசிக்கிறார் ஊர்ப் பெரியவரான பாரதிராஜா. மகன்கள், மகள், பேரன் பேத்திகளுடன் கோரோனா காலத்தில் சந்தோஷமாக இருக்கிறது அவரது குடும்பம். ஆனால், ‘உங்கள் குடும்பத்தில் பவுர்ணமிக்குள் ஒரு உயிர் போகப் போகிறது’ என்று ஜோசியக்காரர் சொல்கிறார். இதனால் குடும்பம், கோரோனாவால் யாரும் இறந்துவிடுவார்களோ எனப் பதறுகிறது.

வரையற்ற ஆன்லைன் திரைப்படங்களை காணும் அனுபவங்களை தரும் இணையத்தளங்கள் பன்னாட்டு சேவைகளாக இயங்கிவருவது அறிந்ததே.

கடந்த தொடரில், வெளிப்புறக் கிரகங்களை (Exoplanets) கண்டறிவதற்கான பாரம்பரிய முறைகள் மற்றும் நாசாவின் The New Worlds Mission இன் இலக்குகள் குறித்துப் பார்த்தோம்.

ஜூனியர் என்டிஆர், சிரஞ்சிவி மகன் ராம் சரண், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, அல்லிசன் டூடி மற்றும் பல புகழ்பெற்ற நடிகர்கள்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.