யூடியூப் கோர்னர்

தமிழில் குழந்தைகளுக்கான கலை இலக்கிய முயற்சிகள் குறைவாகவே உள்ளன. அத்திபூத்தாற் போல் வரும் படைப்புக்களும், புலம்பெயர் தேசக் குழந்தைகளின் வாழ்நிலைச் சூழ்நிலைகளில் அந்நியமானவையாக இருந்து விடுவதினால், அவர்களால் அதனோடு இணைந்து கொள்ள முடிவதில்லை.

இவ்வாறான நிலையில், " நாம் வாழும் தேசத்தின் வாழ்வைப் பாட முயன்றுள்ளோம்" எனும் கூற்றோடு, சுவிற்சர்லாந்து மகிழம் படைப்பகம், இணுவையூர் மயூரனின் ஊசி இலையும் உன்னதம் பெறும் காலம் நூலில் இடம்பெற்ற " வெள்ளிப்பனி சொரியும் காலம் " பனிக்காலப்பாடலை கானொளிப் பாடலாக ஆக்கியுள்ளார்கள்.

தாயககக் கலைஞர் ப.கருணாகரன் அவர்களின் இசையில், க.சதுர்சிகா, இ.தர்சிகா தங்கள் மழலைக் குரலால் பாட, முல்லைத்தீவு வு: யோகம்மா கலையகத்தில் ஒலிப்பதிவும், சுவிற்சர்லாந்தில், தேன்மொழி, மயூரன், மகிழினி ஆகியோரின் காட்சிப்பதிவும் இணைய அருமையான குழந்தைப்பாடலாக வெளிவந்திருக்கிறது.

அந்தப்பாடலை நீங்களும் கண்டு மகிழலாம், அவர்கள் கலைத்துவ முயற்சிக்கு ஆதரவு நல்கலாம்..

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

ரயில் ராதிகா என்று பெயரெடுத்துப் பின்னர் சின்னத்திரை ராணியாக வலம் வருபவர் ராதிகா சரத்குமார்.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

ஈழத் தமிழ்மக்களின் மூன்று தலைமுறைக் கதைபேசும் இத் தொடரின் பாத்திரங்கள் மிகச் சாதாரண மக்கள். 4தமிழ்மீடியாவின் ஆரம்பத்திலிருந்து பல புதிய விடயங்களைத் தொடர் முயற்சியாக முயன்றிருக்கின்றோம். அந்தவகையில் வியாழன் தோறும் எழுத்து, மற்றும் ஒலிவடிவமாக வருகிறது இத் தொடர்

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.