சுவிற்சர்லாந்தில் உள்ள இளங்கலைஞர்களுக்கு, சுவிஸ் சோலோ மூவீஸ் வசி அமைத்துக் கொடுத்திருக்கும் பிரம்மாண்டமான தளத்தில் உருவாகி வந்திருக்கிறது " எழுந்து வா தமிழா " பாடல். இதன் உத்தியோக பூர்வ வெளியீடு நேற்றைய தினம்(30.01.2021), இணையவெளியில் சிறப்பாக நடைபெற்றது.
சென்ற ஆண்டு இடம்பெற்ற "சரித்திரம் விருது " நிகழ்வில் இந்தப் பாடல் அரங்காற்றுகையாக நிகழ்ந்தது. இந்த ஆண்டில் அதனைச் சிறப்பான கானொளியாக வெளியிட்டிருக்கின்றார்கள். முற்றிலும் புலம்பெயர் தேசத்தின் இரண்டாம் தலைமுறைக் கலைஞர்களே இணைத்து உருவாக்கியிருக்கும் பாடல் இது. குறிப்பாக சுவிற்சரிலாந்தின் தகைமைசார் இளைஞர்கள் பலர் ஒன்றினைந்திருக்கின்றார்கள்.
இசையிலும், தொகுப்பிலும் இணைவிலும் மிகச்சிறந்த ஒத்திசைவுடன் உருவாகிய பாடலாக இதனைக் காணலாம்.
இந்தப்பாடலுக்கான கருத்துருவாக்கமும் நெறியாள்கையும் தயாரிப்பும் : சோலோ மூவீஸ் வசி
இசையாக்கம்: வசந் செல்லத்துரை.
பாடல்வரியாக்கம் : கி.செ.துரை
கலைலஞர்கள் ஒருங்கமைப்பு : றுக்ஸான். கர்னாடிக்கபே