யூடியூப் கோர்னர்

அவுஸ்திரேலியாவில் ஆடு மேய்க்கும் விவசாயியான டாவிட் எல்லியொட் என்பவரால் சவன்னாஹ் என்ற இடத்தில் வைத்து புதிய வகை தாவர உண்ணி  டைனோசரின் பாத எலும்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதனால் குறித்த டைனோசருக்கு சவன்னாசௌரஸ் எல்லியோட்டொரும் (Savannasaurus elliottorum) எனப் பெயரிடப் பட்டுள்ளது.

 ஓர் புதிய கல்வியின் பிரகாரம் சுமார் 95 மில்லியன் வருடங்களுக்கு முன்பு ஒரு பஸ் வண்டியின் அளவுடையதும் மிகத் தடிப்பமான தோலையுடையதும் மிக நீண்ட வாலையும் மிக நீண்ட கழுத்தை உடையதுமான சௌரொபொட் என்ற இனத்தைச் சேர்ந்த இவ்வகை டைனோசர் தற்போது இருக்கும் அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகின்றது. இந்த டைனோசரின் எடை மாத்திரம் 22 டன்கள் ஆகும். குயின்ஸ்லாந்தில் உள்ள இயற்கை வரலாற்றுக்கான டைனோசர்களின் அருங்காட்சியகத்தைச் சேர்ந்த முன்னணி ஆய்வாளர் மற்றும் தடயவியலாளரான ஸ்டீபன் பொரொபட் கூறுகையில் இவ்வகை டைனோசர்களின் சமிபாட்டுத் தொகுதி எந்தவகை தாவரமாக இருந்தாலும் அதனை சமிபாடு அடையச் செய்ய வல்லது என்றுள்ளார்.

புதிதாக அடையாளம் காணப்பட்ட உயிரினமான சௌரொபொட் இன் எலும்புக் கூடுகளே அவுஸ்திரேலியாவில் அனைத்து எலும்புத் தொகுதியும் கிடைக்கப் பெற்ற டைனோசர் இனமாகும். இறுதியாக கண்டு பிடிக்கப்  பட்ட இதன் பாத எலும்புகளுடன் சேர்த்து இந்த அனைத்து எலும்புத் தொகுதியும் ஒழுங்கு செய்யப் பட சுமார் 10 வருடங்கள் தடயவியலாளர்களுக்குத் தேவைப் பட்டுள்ளது.