யூடியூப் கோர்னர்

ஹாரிபாட்டர் புகழ் கதாநாயகி எம்மா வாட்சன் டிஸ்னி நிறுவனத்தின் புதிய திரைப்படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

டிஸ்னியின் "இளவரசிகள்" பட வரிசையில் காட்டூன் படமாக வெளியான "பியூட்டி அண்ட் த பீஸ்ட்" கதையை திரைப்படமாக தயாரித்து வருகின்றது டிஸ்னி குழு. இதில் இளவரசி பெல்லாவாக அவதாரம் எடுத்திருக்கிறார் எம்மா வாட்சன்.

அண்மையில் இத் திரைப்படத்தின் முதல் காட்சி புகைப்படங்கள் மற்றும் முன்னோட்ட வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியிருந்தன. இப்புகைப்படங்களில் மந்திரதந்திர அழகுடன் எம்மா வாட்சன் காட்சியளித்திருப்பதாக பிரபல்யமாகி வருகிறது. அதோடு இளவரசி பெல்லா அணியும் அதே மஞ்சள் நிற முழு நீள ஆடையை எம்மா வாட்சனும் அணிந்து நடித்துள்ளார். எம்மா வாட்சனுடன் இணைந்து பிரபல்ய ஹாலிவூட் நட்சத்திரங்களும் நடித்திருக்கும் இத்திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகுமென அறிவித்திருக்கின்றனர். இதோ அதன் புகைப்படங்கும் முன்னோட்ட வீடியோவும் :

 வீடியோ :