யூடியூப் கோர்னர்

 

எஸ்.கமலக்கண்ணன் இயக்கிய «ஒரு பொய்» எனும் குறுந்திரைப்படத்தை பார்க்க கிடைத்தது.  திரைக்கதையிலும், விஞ்ஞானப் புனைவிலும், புதியதொரு பாய்ச்சலுக்கு தமிழ் குறுந்திரைப்பட சினிமாவை அழைத்துச் செல்கிறது.

«ஆரண்ய காண்டம்», «ஜோக்கர்» புகழ் குரு சோமசுந்தரத்தின் குணச்சித்திர நடிப்பு இக்குறுந்திரைப்படத்திற்கு கூடுதல் பலம். «பொய்» சொல்வதால் மக்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு அது ஒரு நோயாக அடையாளங்கணப்பட்டால், அந்நோயை குணப்பத்தும் ஆராய்ச்சிகள் எப்பாதையில் பயணிக்கும் எனும் கேள்வியே கதைக்களம்.

ஏ.ஜே.அப்துல்கலாம் சர்வதேச திரைபப்டம் விழா மற்றும், பிரெஞ்சு நகர திரைப்பட விழா ஆகியவற்றில் சிறந்த குறுத்திரைப்பத்திற்கான பரிந்துரைக்கு தெரிவாகியுள்ள இந்த «ஒரு பொய்», நிச்சயம் அடுத்து வரும் உங்களின் 25 நிமிடங்களை, வேறொரு விஞ்ஞான உலகுக்கு அழைத்துச் செல்லத் தகுதியானது.

முழுமையாக பாருங்கள்.!

- ஸாரா