யூடியூப் கோர்னர்

லண்டன் ஹார்வர்ட் வணிகக் கல்லூரியின் பேராசிரியர் "எமி கெடி" (Amy Cuddy) உடல் மொழி குறித்து உரை நிகழ்த்திய TED வீடியோ பதிவு மிகவும் பிரபலமானது.

2012ம் ஆண்டு வெளியான இந்த வீடியோ பலராலும் வரவேற்கப்பட்டதுடன் இன்று வரை பேசப்பட்டு வரும் விடயமாகவும் உள்ளது.
 
சக்தி, இது அருவமனா விடயம் பலரும் போராடுவர். சிலருக்கு தங்களை, அடுத்தவர்களை, சூழ்நிலைகளை கட்டுபாடாக வைத்திருக்கும் உணர்வாக இருக்கும். அல்லது அவை அனைத்தும் இயற்கையானதாக இருக்கும், ஆனால் சிலருக்கு அது எளிதில் வருவதில்லை.

சமூக உளவியலாளரான எமி கெடியின் இந்த TEDTalk உரையில் சுலபான வழியில் மற்றவர்களின் உணர்விலிருந்து யாரும் தங்களை உணரும் விதத்தில் மாற்றிக்கொள்ளவது குறித்து பகிர்ந்திருந்திருப்பார். இரண்டே நிமிடம் இரு கைகளை இடுப்பிலும், கால்களை விரித்து வைத்தும் தலையை நிமிர்த்தி நேராக நிற்கும் "பவர் போஸ்" செய்வதன் மூலம் இது சாத்தியம் என்கிறார்.


எமி கெடி ஆராய்ச்சியின் படி ஒரு நபர் ஆதிக்கத்துடன் தொடர்புடைய இந்த உடல்மொழியினை 120 விநாடிகள் ஏற்றுச்செய்வதன் மூலம் அந்நபர் அதிக சச்தி கிடைக்கபெற்றதாக உணர்கிறார் என்பதே அவரின் கூற்று.

அதோடு உடல் மொழி எவ்வகைபட்டது, எவ்வாறு மாற்றிக்கொள்ளலாம் எனவும் அவரது வாழ்நாளில் அவர் எதிர்கொண்ட சவால் பற்றியும் இந்த 21 நிமிட வீடியோவில் உரையாற்றியுள்ளார். நிச்சயம் பாருங்கள்.

மூலம் : TEDTalk/huffingtonpost