யூடியூப் கோர்னர்

தொன்மை மிகு நதிக்கரை நாகரீகங்களின் அடையாள நகரங்களாக, தொல்துறை ஆராய்ச்சியாளர்களினால் குறிப்பிடப்படுபவை, மொகஞ்சதாரோ ஹரப்பா.

கி.மு. 2500 - 3000 ஆண்டுகளுக்கு முன்னதான தொன்மை மிகு சிந்துவெளி  நதிக்கரை நாகரீகம் வாழ்ந்த, இந்த நகர்களிலிருந்த சமயவாழ்வு  இந்து  மரபாக இருந்திருக்கலாம் என்பதும், ஆய்வாளர்கள் எண்ணம். அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராச்சிகளில் கிடைக்கப்பெற்ற சுடுமண் சிற்பங்களில் காணப்படும், எருது, திரிசூல, இலட்சினைகளை அதன் குறியீடாகக் கருதுகின்றார்கள்.

" மொகஞ்சதாரோ " வின் பெயரில்,  வரும் ஆகஸ்ட் மாதம் 12 ந்திகதி ஒரு இந்தித் திரைப்படம் வெளியாகிறது. ஹ்ரிக்ரோஷன், பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்திருக்கும் இந்தத் திரைப்படம் மீதான ஆவலைத் தூண்டும் விதம் அன்மையில் வெளியான அதன் திரை முன்னோட்டம் அமைந்துள்ளது.

ஏற்கனவே வெளியாகி பெரும் பாராட்டுக்களையும் பரிசுகளையும் பெற்ற " லகான்" , " ஜோதாஅக்பர் ", ஆகிய திரைப்படைங்களைப் படைத்த அதே குழுவினரின் புது முயற்சியில் உருவாகியுள்ள படம் என்பது, ' மொகஞ்சதாரோ"வின் மீதான எதிர்பார்ப்பினை மேலும்  கூட்டியுள்ளது.

இப் படத்தின் மீதான எதிர்பார்ப்பினை வெளியாகியுள்ள  பாடற் காட்சியொன்றின் காட்சிக் கலைநயமும், வண்ணச் சேர்கையும், பிரமாண்டமும், ஏ.ஆர் ரகுமானின் இசையுமும் தருகிறது எனலாம்...