காட்சி வழி கதை சொல்லல் என்பது இலகுவான ஒன்றல்ல. தேவையற்ற ஒரு சிறு காட்சிப்பதிவும், மூலக் கதையின் மீதான கவனத்தை திசைமாற்றிச் சிதறடித்துவிடும். அனுபவம் மிக்க இயக்குனர்கள் கூட அவ்வாறு தடம்மாறித், தடுமாறிப் போவதுண்டு.
காட்சிப் பாடல்கள் வழி கதைசொல்ல முற்படுகையில், அது மேலும் கவனத்திற் கொள்ளப்பட வேண்டியதாகும். அன்மைக்காலத்தில் ஈழத்தின் இளங்கலைஞர்கள் பலர், தாயத்திலும், புலத்திலும் இவ்வாறான முயற்சிகளில், முன்னேற்றம் கண்டு வருவது மகிழ்வளிக்கிறது.
" ஆயிரம் கனவுகள் ஒரு இலட்சியம் " அல்பத்திற்கான பாடலாக, அன்மையில் வெளிவந்திருக்கும் காட்சிப் பாடல் " விதியின் சதி விளையாடுதே " . Steve Cliff ன் இசைக்கு , இஷா வரிகள் எழுத, ஜிதின் கிருஸ்ணா குரல் தந்து பாடி, நடிக்க, பரமலிங்கம் மணிபரன் இயக்கியுள்ளார்.
UNESCO வினால் புராதனச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கும், சுவிற்சர்லாந்தின் Bellinzona, Castelgrande பகுதியைப் பிரதான காட்சிக் களமாக வைத்து, அழகாகப் படமாக்கப்பட்டிருக்கும் இப்பாடல், இசை, ஒளிப்பதிவு, நடிப்பு, காட்சித் தொகுப்பு, என அனைத்திலுமான கவனத்தோடு, குழுநிலை ஆடற்காட்சிகளுடன் அழகான கதைப்பாடலாக வெளிவந்திருக்கிறது.
From The Album Aayiram Kannavugal Oru Latchiyam | 1000 Dreams one Targed
Music: Steve Cliff
Vocals: Jtin Krishan
Lyrics: C. Isha
Produced by AM.TM
Story & Direction by: Maniparan Paramalingam
D.O.P Editing Co. Director: Denojan R
Make up: Sinthu
Fotography : Nirojan Sutty
Assistant : Arwin Ananthavel
பாடலை இங்கே காணலாம். பங்காளர்களைப் பாராட்டலாம்
BLOG COMMENTS POWERED BY DISQUS