யூடியூப் கோர்னர்

ரூபா ( ROOBHA). NEXT Productionsதயாரிப்பில் வெளிவரும், இயக்குனர் லெனின் எம். சிவத்தின் (Lenin M. Sivam) மூன்றாவது படைப்பு.

1999 திரைப்படத்தின் மூலம், படைப்புத் திறமையை வெளிப்படுத்தி, தன்னை அறிமுகம் செய்து கொண்டவர் லெனின். " GUN & RING" திரைப்படம் அவரது தனித்துவமான திரையாளுமையை வெளிப்படுத்தியது. இப்போது ரூபா.  தமிழ் திரையுலகம் இதுவரை கண்டிராத நாயகி ரூபா !.

இத் திரைப்படத்தின் ஆரம்பகட்டங்களில் அவருடன் விரிவாக உரையாடியிருக்கின்றேன். அந்த உரையாடல்களில் ரூபாவை அறிமுகப்படுத்தியிருக்கின்றார். அன்மையில் ரூபாவின் விளம்பர வடிவம் வந்தபோது, அவர் எனக்கு அறிமுகப்படுத்திய ரூபாவிற்கு அசலான வடிவம் கொடுத்திருப்பதாக உணர்ந்தேன். ரூபாவிற்கான திரை முன்னோட்டத்தில் (Trailer) அவர் எழுத்தில் வடித்த ரூபா உயிர் கொண்டெழுந்திருப்பதைக் காண முடிகிறது.

தமிழ்ச் சினிமாவின் முக்கிய படைப்பாளி லெனின் சிவம் என்பதை, எண்ணத்திலும், எழுத்திலும், வண்ணத்திலும், புதியவளான ரூபா; திரையில் தெளிவுறப் பதிவு செய்வாள் என்பதில் ஐயமில்லை. லெனினுக்கும், அவரது எண்ணத்திற்கு உயிருட்டடிய கலைஞர்களுக்கும் பாராட்டுக்கள். வெற்றி பெற வாழ்த்துக்கள்.

                                                                      - மலைநாடான்