யூடியூப் கோர்னர்

2017 இல் அதிகம் பார்வையிடப்பட்ட வீடியோக்கள் பட்டியலில், பிபிசி செய்தி அறிவிப்பாளர் தனது வீட்டிலிருந்து கொடுத்த இணைய வழி பேட்டி ஒன்றின் போது, அவரது இரு பிள்ளைகளும் இடையூறு செய்த வீடியோ மற்றும் அதனை பிரதிபலிக்கும் கேலி வீடியோக்களை (mems) சுமார் 25 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர்.

Despacito எனும் ஸ்பானிய பாடல் மற்றும் அதற்கான Mems மற்றும் நடன வீடியோக்கள் 4.4 பில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளது. இதே போன்று அதிக வேற்று மொழி பாடல்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Slime எனப்படும் பல வண்ணங்களை கொண்ட ஒருவகை ஒட்டிப் பசையை எப்படி வீட்டில் தயாரிக்க முடியும் எனும் காணொளி, Spinners எனப்படும் 2017 இன் மிகப்பிரபலமான விளையாட்டுப் பொருளை கொண்டு உருவாக்கப்பட்ட காணொளி, 1000 டிகிரியில் சூடாக்கபப்ட்ட கத்தியால் எதையெல்லாம் வெட்ட முடியும் என பரிசோதனை செய்யப்பட்ட காணொளி, ஒரு பூங்காவில் பெண் சிறுத்தை ஒன்று முதல் முதல் தனது குட்டியை ஈன்றெடுக்கும் காணொளி ஆகியனும் இப்பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

Shooting Stars எனப்படும் 9 வருடங்களுக்கு முதலில் வெளியான ஒரு இசைக்காணொளி பாடலை மீண்டும் மிகப் பிரபலமடைய வைத்திருக்கிறது இன்னுமொரு காணொளி.

Fat man does amazing drive  எனும் கேலி வீடியோ ஒன்று இப்பாடலை பின்னணி இசையாக கொண்டு உருவானது. இவ்வீடியோ பிரபலமடையத் தொடங்கிய போது மற்றையதும் பிரபலமாகத் தொடங்கிவிட்டது.

இதைவிட Amtrak Snow-mo collision எனும் காணொளியில் பனிக்கட்டிகள் நிரம்பிய புகையிரத தண்டவாளம் ஒன்றில் புகையிரத வண்டி ஒன்று நுழைவதை காட்சிப்படுத்துகிறது.

மேலும் பல இசைக்காணொளி பாடல்களுடன் வெளிவந்துள்ள 2017 ம் ஆண்டுக்கான Youtube Rewind 2017 இதோ.

https://rewind2017.withyoutube.com/en/