உறவோடு..

வேகம் மிகுந்த காலமொன்றின் வாழ்நிலை மாந்தர்களாகிப் பரபரத்துத் திரிகின்றோம். இந்தப் பரபரப்புக்களின் அவசரத்தில், பலவற்றை அறிந்து கொள்ள முடியாமலும், தெரிந்தவற்றை மீள் நினைவு கொள்ள முடியாமலும், இழந்து போய்விடுகின்றோம்.

அவ்வாறு கடந்து செல்லும், அற்புத தருணங்களில் ஒரு சிலவற்றையாவது நாம் பதிவு செய்யமுடியும். அவ்வாறு நீங்கள் பதிவு செய்ய,  மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள விரும்பும், உங்கள் எண்ணத்தினைத் தயக்கமின்றி பதிவு செய்யுங்கள். அதற்கான  களத்தினை அமைத்துக் கரம் நீட்டுகிறது 4தமிழ்மீடியா.

நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?

உங்கள் விருப்பம் எதுவாகவும் இருக்கலாம்...

பயணம், பாடல், ஆடல், கொண்டாட்டம், உணவு, உணர்வு, அனுபவம், சமூகம், வரலாறு, என எதுவாகவும் இருக்கலாம். அவற்றின் ஒரு சில உன்னத நிமிடங்களை, உங்கள் ஸ்மார்ட் தொலைபேசியில் காட்சிப் படங்களாகவோ, வீடியோவாகவோ, அவற்றுக்கான விபரக் குறிப்புக்களுடன், 4தமிழ்மீடியாவிற்கு பேஸ்புக் மெஸெஞ்சர் அப்ஸ் மூலமாக அனுப்பி வைக்கலாம் .

இதைச் செய்வதற்கு பேஸ்புக் மெஸெஞ்சரை திறந்து அதன் பின்னர் 4TamilMedia என்ற பேஸ்புக் ஐடிக்கு, உங்கள் வீடியோ அல்லது படங்கள், மற்றும் தகவல் கோப்புக்களை அனுப்புங்கள்.அவற்றை அழகான அனுபவத்தின் ஆவணங்களாக, உங்கள் பெயரிலேயே மாற்றித் தருகிறது 4Tamilmedia creative Lab.

பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் வீடியோ , படங்களின் கோப்புக்களை அனுப்பவது எப்படி?

இன்னும் என்ன தயக்கம்..?

கரம் கோர்ப்போம். காலங்களைப் பதிவு செய்வோம்..!

பேஸ்புக் மெசஞ்சர் மூலமாகத் தொடர்புகொள்வதற்கான இணைப்பு : https://www.facebook.com/4tamilmedia

உதாரணத்திற்கு ஒரு நிமிடம்: