உறவோடு..

இயல், இசை, நாடகம், எனும் முத்தமிழால் பெருமை பெற்றது நம் தாய்மொழியான தமிழ்மொழி. காலத்தின் வளர்ச்சி கண்டெடுத்த கணினித் தொழில் நுட்பத்தில் கனிந்த,   நான்காம் தமிழான கணினித் தமிழ் மூலம்,  இணையவெளியில் செய்தித் தகவல் பரிமாற்ற இணைய ஊடகமாகப் பரிணமித்திருக்கிறது 4தமிழ்மீடியா.

கணினித் தமிழோடு, புதிய நுட்பங்களை உள்ளிணைத்து, உலகத் தமிழர்கள் ஒன்று கூடி, தினமும் புதிதாய் திகழும் உலகை, உவகைத் தமிழில் கண்டு, மகிழ்ந்திட உதித்திருக்கும்  4தமிழ்மீடியா, உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்கள் பலரின் நேசிப்பிற்குரியதாய் இருப்பதில் அகம் மகிழ்கின்றோம்.

2008ம் ஆண்டிலிருந்து இணையத்தில் வலம் வரும் 4 தமிழ்மீடியாவின் குழுமம், இந்திய, இலங்கை, மலேசிய, ஊடகத்துறைசார் நண்பர்களின் ஒன்றினைவில் உருவானது. ஊடகநெறிமுறைத் தார்மீகத்துடன், தமிழ்கூறு நல்லுலகில் தனித்துவமாய் சேவையாற்றி வரும் 4தமிழ்மீடியா குழுமத்தினராகிய நாம்,  செயல்விருப்பு மிக்க அனைவரையும், இணைந்து பயணிக்க விரும்பி அழைத்தவாறு தொடர்ந்து செல்கின்றோம்...

என்றும் இனிய நட்புடன்,
4தமிழ்மீடியா குழுமம்.

எம்மைப்பற்றி மற்றவர்கள்:

மீடியா 4 தமிழ்ஸ்!

இது வலைமனை - வாங்க காப்பி சாப்பிட்டபடி பேசலாம்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.