உறவோடு..
Typography

சிகரங்களை நோக்கிப் பயணிப்பவர்கள் அறிவர் உச்சங்களின் முன்னதான சிரமங்கள்.  தடைகளெனத் தோன்றும் கற்களைப் படிகளாக்கிப் பயணிக்க முடிந்தால் மட்டுமே உயரங்கள் தொடமுடியும்.  அந்த புரிதலுடனும், வசப்படுமெனும் , நம்பிக்கையுடனும், எட்டு ஆண்டுகளை எட்டிக் கடந்த எங்கள் ஊடகப் பயணம்,  இன்று இன்னுமொரு புத்தாண்டில்...

4தமிழ்மீடியா தனது ஊடகப் பயணத்தில் எட்டு ஆண்டுகள் கடந்து நிற்கின்றது. புதிய சிந்தனைகளை செயலாக்க விளையும் தொடர் பயணம் இது. சாத்தியமா ? எனும் வினா கடந்த விடையின் பயணம். தூரப்புள்ளியைத் தொட்டுவிடும் நம்பிக்கையின் பயணம்.  இந்தப் பயணத்தில், இளைப்பாறல்களும்உண்டு.  இடைநடுவில் நின்றவைகளும் உண்டு.

தமிழ் ஊடகச் சூழலில் எமது வளர்ச்சி ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலானது. எம்மை வளர்த்துக் கொள்வதற்காக,   சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிநடத்தும் செயல்களில் ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தி எப்போதும் உண்டு.

கடந்து சென்ற எட்டாண்டுகளில்,  எங்களோடு உடன் பயணிக்கும் ஒவ்வொருவரும் அறிவர் எங்களின் வளர்ச்சி மாற்றத்தை.  அவ்வாறான சக பயணிப்பில் தொடரும் உங்கள் ஒவ்வொருவரது உறவின் நம்பிக்கை,  தொடரும் முயற்சிக்களுக்கான தொடுப்புக்கள். தொடுப்புக்களின் பலம் அறிவோம். ஆதலால் அவற்றினை மேலும் மேலும் இறுகப்பற்றி நடக்கின்றோம்.

குறைகளைச் சொல்லுங்கள், நிறைவாக மாற்றி இன்னும் செல்வோம், இனியவை செய்வோம்,  எனும் எண்ணங்களை, வண்ண மலர்களெனச் சொரிந்து வழிநடக்கின்றோம். மாற்றங்களுக்குத் தேவை வாழ்த்துக்கள் அல்ல,  வழிதொடர்ந்து வாழ்வது மட்டுமே. பிரியமானவர்களே! வாருங்கள் வாழ்ந்து பார்க்கலாம்...!

- என்றும் மாறா இனிய அன்புடன்

4தமிழ்மீடியா குழுமம்

BLOG COMMENTS POWERED BY DISQUS

கோவிட்- 19 கோரோனா வைரஸ், இத்தாலியில் நடந்தது என்ன ?  திரும்பத் திரும்பச் சொல்வோம் அவர்கள் விட்ட தவறினைச் செய்யாதிருப்போம் ! 

கொரோனா வைரஸ் ப்ரேக்கிங் நியூஸ் - சங்கவி மயூரன் !

பகிர்வதற்கு

 

 

அழுத்துங்க..பாருங்க!

 

மின்னஞ்சலில் பதிவுகள்

மின்னஞ்சலில் பதிவுகள்