உறவோடு..

இன்றைய திகதியில் சமூகங்களின் வாழ்வும், வரலாறும் சரியாக கணிக்கப்படாமல் ‘வீங்கி வெடிக்கின்ற’ நிலையில் காட்டப்படும். அல்லது, ‘ஒன்றுமே இல்லை’ என்கிற அளவோடு மறைக்கப்பட்டுவிடும்.

இவற்றுக்கு அரசியல், அவற்றில் வெளிப்படும் (தேசிய, மத, இன) வாதங்கள், அவற்றை பொறுப்புணர்வின்றி கொண்டு சுமக்கும் ஊடகங்களும் முக்கியமாகின்றன. இப்படிப்பட்ட நிலையில், சரியான வரலாற்றை பதிவு செய்ய வேண்டியது ஊடகங்களின் பெரும் கடமை. அதற்கு தார்மீக அறமும், பொறுப்புணர்வும் அவசியமாகின்றது.

புற்றீசல்கள் மாதிரியான இன்றைய ஊடகத் தோற்றத்தில் பெரும்பாலனவற்றின் நோக்கம் மக்களை எப்படியாவது சேர்ந்துவிடுவது. அதாவது, தன்னுடைய பொருளை எவ்வளவு ஏமாற்று வேலை செய்தாவது விற்றுவிடத் துடிக்கும் மோசமான வியாபாரியின் மனநிலையை ஒத்தது. இவ்வாறான நோக்கங்களுடன்,  இதற்கு இணையாக வளர்ந்திருப்பது சமூக வலைத்தளங்கள்.

இன்று மக்களிடமும் பெரிதாக நேரம் இல்லை. அவசரத்தில் அவர்களும் எது உண்மை என்று பிரித்தறிவது குறைவு. உலகம் துரித உணவு (பாஸ்ட் புட்) கலாசாரத்துக்கு மாறிவிட்டது மாதிரி, ருசியாக இருந்தால் போதும் போசாக்கு பற்றி எல்லாம் அலட்டிக் கொள்வதில்லை. மொத்தமாக பசி அடங்கினால் போதுமென்ற நிலை. அதுதான், இன்றைக்கு குறிப்பிட்டளவில் ஊடகங்களை மக்கள் அணுகும் நிலையும். இவ்வாறான நிலையில் ஊடகத்துறையில் இயங்குபவர்கள் பொறுப்புணர்வோடும், வரலாற்றினை நாம் ஆவணப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையை தங்களுடைய மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இல்லையெனில், பிழையான வரலாற்றை எழுதி, தப்பான படிப்பினைகளை அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்து அவர்களை அழிப்பதற்கான ஆயத்தங்களைச் செய்கின்றோம் என்று பொருள். ஏனெனில், எமக்கு முன்னால் இருக்கின்ற படிப்பினைகளில் காணப்படும் தவறும், அதனால் நாம் பெற்ற இழப்பும் பெரிதானது. அதிலிருந்து மீள்வதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லாதது.

‘4தமிழ்மீடியா’ என்கிற எமது ஊடக தவத்தை பொறுப்புணர்வு என்ற அடிப்படையோடு ஆரம்பித்து இன்றோடு பதினொரு ஆண்டுகள் நிறைவடைகிறது. சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களோடு நான்காம் தமிழ் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய எமது வளர்ச்சி என்பது ‘விரலுக்கு ஏற்ற வீக்கம்’ என்கிற அளவிலேயே இருந்திருக்கிறது. எம்மை வளர்த்துக் கொள்வதற்காக, என்றைக்குமே சமூகத்தை வீணடிக்கும் அல்லது தப்பாக வழிகாட்டும் செயல்களில் (எம்மை அறிந்து) ஈடுபட்டதில்லை என்கிற மனத்திருப்தியோடு பயணிக்கின்றோம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்லித் திருப்தி கொள்வோம். இந்த மனத்திருப்தியும், நம்பிக்கையுமே எங்கள் பலத்தின் ஆதாரம் .

ஒரு தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தினை, எவ்வளவோ இடர்களைச் சந்தித்தே கடந்திருக்கிறோம். இனியும்அவைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வோம். அதற்கான ஆதாரமாக, எமைத் தொடரும் வாசகர்களாகிய நீங்கள் இருக்க வேண்டும். எமது, படைப்புக்கள், ஊடக நடவடிக்கைகளில் தவறுகள், கருத்துக்கள் இருப்பின் எந்தவித தயக்கமும் இன்றி சுட்டிக்காட்ட வேண்டும். அதுவே, எம்மை இன்னும் வளப்படுத்த உதவும்.

எமது வளர்ச்சிப் பயணத்தில் உடன் வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும்!

- என்றும் மாறா இனிய அன்புடன் 

4தமிழ்மீடியா குழுமத்தினர்

‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் எச்.விநோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் நடித்து வரும் படம் 'வலிமை'.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

கடந்த 2013-ல் வெளியான ‘ஆமென்’ என்ற படத்திலிருந்து தனித்துவமான திரைமொழியை கையாண்டு வெற்றி கண்டவர் லிஜோ ஜோஸ் பெல்லிச்சேரி.

யார்க்ஷயரில் உள்ள ஒரு மலைப்பாதையில் கால்டர்டேல் மலைப்பாதையில் மாபெரும் புற்தரை ஓவியம் ஒன்று வரையப்பட்டுள்ளது.

முந்தைய பாகத்துக்கான இணைப்பு -

நாம் தனிமையில் இல்லை..! - பாகம் - 2 (We are Not Alone..Part-2)

கடந்த தொடரில் நாசாவின் SETI என்ற திட்டம் குறித்துத் தெரிவித்திருந்தோம். அது தொடர்பான விபரங்களை சுருக்கமாக முதலில் பார்ப்போம். SETI என்பது ஆங்கிலத்தில் Search for extraterrestrial intelligence அதாவது விண்வெளியில் அறிவுத்திறன் மிக்க உயிரினங்களுக்கான தேடல் என்று விரிவு பெறும்.

தமிழ் நாட்டிற்கே தலைமை தாங்க தகுதியானவர்கள்...அரசியலை தூய்மைப்படுத்திவிடுவார்கள்...

டாம் & ஜெர்ரி ஆகிய பூனையும் எலியும் விரட்டி விரட்டி சண்டையிட்டுக் கொள்ளும் காட்டூன்களை ரசிக்காத ரசிகர்களே இல்லை எனலாம்.