உறவோடு..

அன்பிற்கினிய வாசக நண்பர்களே !

இன்று 11.04.2020 சனிக்கிழமை, ஐரோப்பிய நேரம்  மாலை 05.00 மணிமுதல் சில மணிநேரத்திற்கு எமது 4தமிழ்மீடியா தளத்தினைத் திறப்பதில், அதன் பக்கங்களைக் காண்பதில் சில தடைகள் ஏற்பட்டிருக்கலாம். எமது தளத்திற்கான பிரதான இணையவழங்கியில்  ஏற்பட்ட தொழில்நுட்பச் சிக்கல் காரணமாகவே இது நிகழ்ந்து. தொழில்நுட்பவியலாளர்கள் மிக விரைவாகவே அதைச் சீர்செய்த போதும் சில மணிநேரமாக, சீரான முறையில் வாசகர்கள் தளத்தினைப் பார்வையிட முடியாது போயிருக்கும்.  எமது இயங்கு சக்திக்கு அப்பாற்பட்ட காரணத்தினால் நடைபெற்ற இத் தவறுக்கும், அதனால் தங்களுக்கு ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனம் வருந்துகின்றோம்.

தற்போது தளம் சீராக இயக்கத் தொடங்கியிருப்பதைமகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

என்றும் மாறா இனிய அன்புடன்

4தமிழ்மீடியா குழுமம்

 

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்து வந்த ‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் எதிர்பாராமல் நிகழ்ந்த கோர விபத்தால் உதவி இயக்குநர் உட்பட பலர் உயிரிழந்தனர். இதனால், படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

தமிழில் வணிக சினிமாக்கள் இரண்டு வகையாக இயங்குகின்றன. ஒன்று முற்று முழுதாக ரசிகர்கள் ஊகித்துவிடும் கதைப்போக்குடன் அமைக்கப்படும் மசாலா சட்டகத்தைக் கொண்டவை. மற்றொன்று அந்த சட்டக்கத்தைக் கொஞ்சம் மீறி, விறுவிறுப்பான திரைக்கதையைக் கொண்டிருந்தாலும் வணிக அம்சங்களையும் சித்தரிப்புகளையும் கைவிடாத வகையாக வெளியாவது.

ஹாரிபாட்டர் புகழ் ஜே.கே.ரவுலிங், தனது இக்காபாக் (The Ickabog) எனும் ஒரு அரக்கனைப் பற்றிய விசித்திரக் கதையின் முதல் பாகத்தை ஆன்லைனில் இலவசமாக வெளியிட்டுள்ளார்.

21 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் 2003 ஆமாண்டு விண்ணுக்கு பூமியின் தாழ்வு ஒழுக்கில் வலம் வந்து கொண்டிருக்கும் ISS என்ற சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு சென்று திரும்புகையில் எந்திரக் கோளாறால் கொலம்பியா என்ற விண் ஓடம் விபத்தில் சிக்கியது.

கொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

தமிழர் கலைகளில் 'வில்லுப்பாட்டு' ஒரு முதுகலையாகும். போர்களங்களில் போராடிய வீரர்கள் மத்தியிலிருந்து, கதையும் பாடலுமாகப் பிறந்த கலைவடிவம் எனவும் சொல்கின்றார்கள். இதனைத் தமிழகத்தில் பன்னெடுங்காலமாகச் சொல்லி வந்த ஒரு பெண்ணின் வரலாற்றினை, வாழ்வினை, தமிழுக்குப் புதிய இசைவடிவமான ராப் பாடல் மூலம் சொல்கின்றாள் ஒரு பெண்.