உறவோடு..

அன்பிற்கினிய நண்பர்களே !

இணையவெளியில், 105192 மணித்தியாலங்கள், 4383 நாட்கள், 144 மாதங்கள், 12 ஆண்டுகள் பயணித்திருக்கிறது "4தமிழ்மீடியா".

2008ல் நான்காம் தமிழில் ஊடகமாக இணையத்தில் வலம் வரத் தொடங்கிய 4தமிழ்மீடியா எவ்வளவு காலம் தாக்குப் பிடிக்கும் எனச் சந்தேகித்தவர்கள் உண்டு. சில அசாத்திய நம்பிக்கை மனிதர்களின் பொறுப்பும், உழைப்புமே, தொடரும் பயணத்தின் வழித்துணைகள்.

உலகெங்கும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் எதிர் கொள்ளும் சவாலான காலமிது. தமிழ் ஊடகப் பரப்பின் தளர்நிலை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எதிர்ப்படும் இன்னல்களையெல்லாம், "எண்ணிய முடிதல் வேண்டும்.." எனும் பெருவிருப்போடு, முயன்று கடக்கின்றோம். இதுவொன்றும்  நீரோடு அடித்துச் செல்லப்படல் அல்ல நீரோட்டத்தின் வாகறிந்து, நீந்திக் கடக்கும் முயற்சிதான்...

சமூகவலைத்தளங்களும், தொடர்பாடல்களும், நிறைந்துவிட்ட நிலையில் நாம் ஆற்றியது என்ன? ஆற்றப்போவது என்ன ? என சற்றே நின்று யோசித்துப் பார்க்கையில், நம்முன்னே விரிகிறது சமூகத்தின் தேவைகளும் சேவைகளும்.

புதிய யோசனைகள், புதிய திட்டங்கள் என எண்ணித் தொடங்கையில், எல்லாத் திசைகளிலும் எதிர்பாராத பெரு நோயின் தாக்கம். ஆனாலும் நாம் ஒருபோதும் ஓய்ந்ததில்லை, சோர்ந்ததில்லை. கனிந்து வரும் காலத்திற்கான தவம் போல் தொடரும் எமது ஊடகப் பயணத்தில் உடன் வரும் உங்களின் அன்பும் ஆதரவும் இன்னும் உற்சாகமாய் பயணிக்க வலுச்சேர்க்கும், வளமாக்கும் என்பதுவே உண்மை.

உடன்வரும் அனைவர்க்கும் நன்றிகளும், வணக்கங்களும் !

- என்றும் மாறா இனிய அன்புடன்

4தமிழ்மீடியா குழுமத்தினர்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்

 

  இணைப்பினில் அழுத்தி  புதிய கானொளிகள் பார்த்து மகிழுங்கள்

மின்னஞ்சலில் பதிவுகள் பெறுவதற்கு :

இவற்றையும் பார்வையிடுங்கள்

கொரோனா பெருந்தொற்று ஒரளவுக்கு குறைந்திருக்கும் நிலையில் திரையரங்குகள் தமிழ்நாட்டில் திரையரங்குகள் திறக்கப்பட்டன.

கடந்த இரு வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்த லொகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில், இம்முறை கொரோனா காரணமாக, இணைய வழி திரைக்காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருந்தன.

ஒருவனின் திறமையைக் கண்டு அவன் மீது காதலில் விழும் பெண், தனக்கு வராத படிப்புடன் வம்படியாக மல்லுக்கட்டும் ஒரு துறுதுறுக் குறும்புப் பெண்ணின் தீவிர முயற்சி என்னவாகிறது என்பது ஒரு வரிக்கதை.

இலேசாக வீசிய காற்றில் இலைகள் சலசலத்தன. கூடு திரும்பிய பறவைகளின் குரல்கள் மலரத் தொடங்கிய மாலையை அறிவிக்க, அவற்றின் நடுவே இராசத்தின் குரல் எனக்குக் கேட்டது.

"வேம்பி..!"

பெப்ரவரி 21 திகதியான இன்று பன்னாட்டுத் தாய்மொழித்தினம் கொண்டாடப்படுகிறது.

கடந்த ஆண்டு மலையாளத் திரையுலகில் ‘ஐயப்பனும் கோஷியும்’, ‘லூசிஃபர்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஜெல்லிகட்டு’ ஆகிய படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.

நடிகர் தனுஷ்; மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ‘கர்ணன்’ திரைப்படத்தின் பாடல் அண்மையில் வெளியானது.