உறவோடு..

இணைய வெளியில் தொடரும் ஏற்றமிகு பயணத்தின் இன்னுமொரு நிலை காணலுக்கான தயார்ப்படுத்தல் நேரம் இது.  வரும் 14ந் திகதி எட்டாவது ஆண்டினை நிறைவு செய்து 9 வது ஆண்டிற்குள், உங்களோடு சேர்ந்து அடியெடுத்து வைக்கவுள்ளோம்.  அந்த மகிழ்வின் தொடக்கமென மாற்றம் கண்டுள்ளது 4தமிழ்மீடியாவின் தளவடிவமைப்பு .

வார இறுதியில் தொடங்கிய தொழில்நுட்பப் பணிகளின் முதற்கட்ட நிறைவோடு, சேவைக்குத் திரும்பியுள்ளோம். 50 ஆயிரத்துக்கும் அதிகமான இடுகைகளை மீளமைக்கும் பணிகள் தொடர்கின்றன.  ஆதலால் இன்னும் சில நாட்களுக்கு, 4தமிழ்மீடியாவின் முன்னை இணைப்புக்களை நீங்கள் காண முடியாதிருக்கும்.  ஆயினும் இப் பணிகள் இன்னும் சில தினங்களில் முழுமைபெற்றுவிடும்.

நீங்கள் எவ்வகைச் சாதனத்தின் உதவியொடு இணைய வாசிப்பினை மேற்கொள்பவராக இருந்தாலும்,  இப்போது 4தமிழ்மீடியாவின் பக்கங்களை இலாவமாகவும், இலகுவாகவும் வாசிக்கும் வகையில் புதிய தளவடிவமைப்பினை நீங்கள் காணலாம். இந்த மாற்றம் கைத் தொலைபேசிகளின் வழி, இணைய வாசிப்பினை மேற்கொள்பவர்களுக்கு ஏதுவாக இருக்கும் என்பது எங்கள் நம்பிக்கை.

9வது ஆண்டை நோக்கிய பயணம் ஆரம்பமாகவுள்ள இந்த நாட்களில் மேலும் பல புதிய விடயங்கள் உங்கள் பார்வைக்கு வரவுள்ளது என்பதைத் தெரிவித்து,  எப்போதும் போல்  இணைந்திருங்கள்,  இன்னமும் பலம் பெறுவோம், பயன் பெறுவோம் எனச் சொல்லி, மீண்டும் சந்திக்க இப்போது விடைபெறுகின்றோம்.- என்றும் மாறாத இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்

 

தமிழ் சினிமாவில் தரை லோக்கல் வேடங்களில் நடித்து முன்னுக்கு வந்தவர் ஜீவா. இவர் தற்போது 1983-ல் இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையில் பெற வரலாற்றை படமாக்கிவரும் ‘83’ என்ற இந்திப் படத்தில் 11 இந்தியக் கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக நடிக்கிறார்.

சுவிற்சர்லாந்தின் நியோன் நகரில் நடைபெறும் Vision du Reel சர்வதேச ஆவணத்திரைப்பட விழாவில், இம்முறை சிறந்த முழு நீள ஆவணத் திரைப்படத்திற்கான விருதை பெற்றுக்கொண்டது இத்தாலிய திரைப்படமான Punta Sacra.

சில படங்கள் எல்லா காலத்துக்கும் பொருந்தக் கூடிய உண்மையை வெட்டவெளிச்சமாக்கிக் காட்டுபவை. வெற்றிமாறன் இயக்கத்தில் 2015-ல் வெளியான ‘விசாரணை’ திரைப்படத்தை, சாத்தான்குளம் அப்பா - மகன் படுகொலைகள் தூக்கமின்றி தவித்த நள்ளிரவில் நினைவூட்டின.

சென்னையின் மயிலாப்பூருக்கு பல சிறப்புகள் உண்டு. முதலில் அதுவொரு ஆன்மிகத் தலம்.

நிச்சயம் உள்ளது. ஆனால் இதனை இவ்வாறு ஒழுங்கு படுத்தலாம். எமது சூரியன் எமது பால்வெளி அண்டத்தின் மையத்தை அல்ல ஆனால் அதன் மொத்த நிறையின் ஈர்ப்பு மையத்தை (barycenter) சுற்றி வருகின்றது.

தமிழ் நாட்டில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிறிது காலம் சென்னையிலிருந்த நடிகர் சூரி பின்பு தனது சொந்த ஊரான மதுரைக்கு அருகில் உள்ள ராஜாக்கூர் என்ற கிராமித்திற்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுகின்றார்.

எழுத்தாளர் ஜான் கிரீன் எழுதிய “தி ஃபால்ட் இன் எவர் ஸ்டார்ஸ்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, தில் பச்சாரா திரைப்படம் உருவாகியுள்ளது.