உறவோடு..
Typography

4தமிழ்மீடியா இந்த ஆண்டிற்கான பயணத்தைத் தொடங்கிய போது, நமது வாசகர்களோடு பகிர்ந்து கொண்ட வார்த்தைகளை, இன்று மீள் நினைவு கொள்கின்றோம். காத்திருப்புக் கனிந்திருக்கிறதா என்பதைக் காலம் உணர்ந்தும் என்னும் நம்பிக்கையோடு நாட்களைக் கடந்து செல்கின்றோம்.

கொக்கொக்கக் காத்திரு!
அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு - வள்ளுவப் பெருந்தகையின் இந்த வரிகளின் வலிமை, அறிந்த கணங்களாக இன்றைய பொழுதுகள் அமைகின்றன.

4தமிழ்மீடியா  இணையத்தில் செயற்பட ஆரம்பித்து ஏழாண்டுகள் முழுமையுற்று, இன்று எட்டாவது ஆண்டில் நடைபயிலத் தொடங்குகிறது.  இந்தப் பயணம் பற்றிக் கடந்த காலங்களில் நிறையவே பேசியாயிற்று.

ஏழாண்டுகளில் எட்டிவிட்ட உயரங்கள் இருந்தபோதும், இன்னமும் தொட்டுவிட நினைக்கும் சிகரங்களை நோக்கியே எம் சிந்தனைகளும் செயற்திறனும்.

தகவல் தொடர்புகள் விரிந்த இன்றைய யுகத்தில் இயல்பாகவுள்ள சவால்கள், பெருநிறுவனங்களின் வணிகமயமான செயற்பாடுகள் என எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் கடந்து, இலக்குகளை நோக்கிய பயணத்தில், எதிர்கொள்ளும் காத்திருப்பும் சுகமானதாக, சுவாரசியமானதாக, பொருள் பொதிந்ததாக உணர்கின்றோம்.

உணர்தலின் பொழுதுகளான இன்றைய நாட்களில்,  " கொக்கொக்கக் காத்திரு! அதன் குத்து ஒக்கச் செயலை முடித்திடு " என்னும் வள்ளுவ வாய்மொழியின் வீரியம், எம்முள் விதைக்கின்ற தைரியத்தில், எம் எண்ணங்கள் கனியும் காலங்களுக்காகக் காத்திருக்கின்றோம்.

கடந்து வந்த ஏழாண்டுகளில், சேர்ந்து வந்த வாசகப் பெருமக்கள், செயலூக்கம் மிக்கப் பங்காளர்கள், அனைவரையும் நன்றிகளோடு நினைவு கொள்கின்றோம். 4தமிழ்மீடியா மீதான உங்கள் நம்பிக்கைகள், எதிர்பார்ப்புக்கள், என எல்லாவற்றையும், எண்ணத்தில் சுமந்து, இன்னும் பயணிப்போம். இணைந்திருங்கள் இது நம்பிக்கையின் காத்திருப்பு !

 "தினமும் உலகைப் புதிதாய் காணலாம் "


- என்றும் மாறாத இனிய அன்புடன்
4தமிழ்மீடியா குழுமம்

BLOG COMMENTS POWERED BY DISQUS